19

19

ரம்புக்கனை சம்பவம் – ஐக்கிய நாடுகள் சபை கவலை !

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் கவலை வெளியிட்டுள்ளார்அவர் தெரிவித்துள்ளதாவது,

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றேன்.

எந்த தரப்பினதும் வன்முறையும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைகளிற்கு இடையூறுவிளைவிக்கும்.பொதுமக்களையும் அவர்களிற்கு தங்கள் அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையையும் பாதுகாப்பதற்கு பலத்தை பயன்படுத்துவதை ஆகக்குறைந்தளவிற்கு தேவையானதாக மட்டுப்படுத்துவது அவசியம்.

இலங்கையர் எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் – 6 பாகிஸ்தானியர்களுக்கு மரணதண்டனை !

இலங்கையரான பிரியந்த குமார தியவடன பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அடித்து, துன்புறுத்தப்பட்டு, தீக்கிரையாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பிலான காணொளிகளின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 100இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த 15 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.