சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகளை ஐ.தே.க. எம்.பி. ஆர். யோகராஜன் நேற்றுக் காலை சபையில் முன்வைக்க முற்பட்ட போது அரச தரப்பிலிருந்து அதற்குக் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஷ் குணவர்தன போன்றோர் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் கையொப்பமிடாத ஆவணமொன்றைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பிக்கு எத்தகைய அதிகாரமோ உரிமையோ கிடையாதென தெரிவித்தனர்.
யோகராஜன் எம்.பி. இதனைச் சபையில் முன்வைத்த போது அவர் முன்னால் அங்கம் வகித்த இ. தொ. கா. வின் சார்பில் கூற்றுக்களைத் தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட இ. தொ. கா. தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஒரு இ. தொ. கா. உறுப்பினரல்ல. இ. தொ. கா.வின் சார்பில் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கும் உரிமை அவருக்குக் கிடையாதெனத் தெரிவித்தார்.