இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடைபெறும் முதலாவது ரெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நிறைவின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 520 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பரனவிதாரண 111 ஓட்டங்களையும் சங்கக்கார 103 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மிதுன் 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நாள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷெவாக் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும் லக்ஷ்மன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது