July

July

கே.பி.யை வடமாகாண முதலமைச்சராக்க முயற்சி :பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

sarath-fonseka.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை)  வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை. இராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார்.

அவரது கணக்கில் பில்லியன் டொலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு தொடரும் – ஜி.எஸ்.பி விவகாரத்தை வைத்து பகையை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சி

denes.jpgஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடனான எமது நட்புறவு தொடரும். ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி. எஸ். பி. நிவாரண விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் நிரந்தரப் பகைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீடிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை களை முன்வைத்திருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை.

இலங்கை இறைமையும், சுயாதிபத்தியமும் தனித்துவம் மிக்க ஒரு நாடு என்ற வகையில் நாம் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேறு உதவி ஒத்துழைப்புக்களை நாம் பெற்றுக் கொள்ளுவோம்.

நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியுள்ளோம். எமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதற்கு வடக்கும் கிழக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாணய கையிருப்பு பாரியளவு அதிகரித்துள்ளது. இந்த வரவு – செலவு திட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார, கூட்டமைப்பு மேம்பாட்டுக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது.

புலிப் பயங்கரவாதிகளால் அச்சம், பீதி கொண்டிருந்த மக்களை அந்த பீதியிலிருந்து விடுத்துள்ளோம். அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

புலிகளின் பிடியில் சிக்கி இருந்த சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் கடந்த வருடம் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உலகில் எந்த நாடும் செய்யாத அளவு நாம் சேவை செய்துள்ளோம். இது வரலாறாகும். புலிகளுடன் தொடர்புடையவர்கள் சிறுதொகையினர் மாத்திரமே தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகள் முடிவுற்றதும் அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்.

தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் நடைபெற்றது. ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் ஆகியோருடன் த. ம. வி. பு. சார்பில் கைலேஷ்வரராஜா, நிஷாந்தன் ஆகியோரும் முதல் முறையாக கலந்துகொண்டனர். தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர் களும் நேற்றைய சந்திப்பின் போது கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள், குறுகிய கால திட்டங்கள், மக்களின் உடனடித் தேவைகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அணுகுமுறை போன்ற விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள் அடுத்தடுத்து வரும் கூட்டங் களில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து வரைபு ஒன்றை தயாரிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது.

இதற்கென 8 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மீண்டும் கூடும் போது மேற் படி குழு தயாரிக்கும் வரைபு சமர்ப்பிக்கப்படும். இந்த வரைபின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மேற்கொள்ளும். அத்துடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மேற்படி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தினுள் உள்வாங்குவது தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் செயற்படுவது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

நல்லிணக்க ஆணைக்குழு முறைப்பாடுகளை முன்வைக்க ஓகஸ்ட் 18 வரை கால அவகாசம்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாண மட்டத்தில் விசாரணைகளை நடத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவால் 2010 ஜுன் மாதத்தில் கிரமமாக கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

ஆணைக்குழுவின் தற்போதைய வேலைகளில் நிறுவனம்சார்ந்த விடயங்கள் மீது முதற்கட்டமாக கவனம் செலுத்தப் பட்டது. எதிர்காலத்தில் இடம்பெறும் பகிரங்க சாட்சி விசாரணைகளுக்கு வசதியாக அமையும் பொருட்டே அவ்வேலைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆணைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான எழுத்திலான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அறிவித்தலொன்று செய்தி தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2010 ஓகஸ்ட் மாதம் 18 ஆந் திகதி வரையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொதுமக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு தமது பணிகள் தொடர்பில் வசதியாக அமையக் கூடிய விதத்தில் தாமதமின்றி தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு ஆணைக்குழுவுக்கு எளிதாக வரக்கூடிய வகையில் அந்தந்த மாகாணங்களில் குறிப்பாக தொடர்புபட்ட நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது பகிரங்க கூட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாக நிகழ்வுகள் மீது தாக்கம் செலுத்தியுள்ள பிரதேசங்களிலிருந்து ஆணைக்குழுவினால் நேரடியாகவே விடயங்களைத் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக ஆணைக்குழு தற்போது வேலைத்திட்ட மொன்றை வகுப்பதில் ஈடுபட்டுள்ளது.

ஆணைக்குழு அதற்கு வசதி அளிப்பதற்காகவும் துணைபுரிவதற்காகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்குமாறு ஆணைப்பத்திரத்தின் வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் முனைப்பாக ஈடுபட்டிருந்தவர்களும் பரந்தளவிலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களான ஆட்களுக்கு அதன் சொந்த விருப்பத்தின் மீது அழைப்பு விடுக்கும்.

ஆணைக்குழு 2010 ஓகஸ்ட் மாதத்தில் பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

தற்காலிக குடியிருப்புகளில் வாழும் தோட்ட தொழிலாளருக்கு நிரந்தர வீடுகள் பட்ஜட் விவாதம் முடிந்ததும் பணிகள் ஆரம்பம்

muttu.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

தற்காலிகக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் காணிகள்

பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு பிரிவு, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், நிர்வாக ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதில் முன்பு முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிரந்தரமாகக் குடியிருப்பு வசதிகள் இருப்பவர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து சரியானவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாகக் குழுவை அமைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருமலை மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாதுகாப்பு செயலர் நேற்று விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திருகோணமலையிலுள்ள மொரவெவ திவுல்வெவ மீள்குடியேற்ற பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் மொரவெவவில் மீள்குடியமர்த்தப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலையையும் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

மயோன் முஸ்தபாவிற்கு பிடிவிராந்து உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மலிற்கு, மயோன் முஸ்தபா 4200000 ரூபா லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குறித்த விடயம் தொடர்பாக கல்கிசை நீதிமன்றத்தில் விசானைக்கு எடுத்துக் கொண்ட போது மயோன் முஸ்தபா நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா தற்போது வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேர் விளக்கமறியலில்

candana.jpg1996 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் பிலியந்தலையில் சி.டி.சந்திரரத்ன என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னால் பிரதி அமைச்சர் சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேரை இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை ஒரு ஜூரி சபையின் கீழ் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் ஹாலந்துஅணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

neda.jpg

பயங்கரவாத ஒழிப்பு அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ஜனாதிபதி

ugrain.jpgநாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், எமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பயனாகவே எமது நாட்டுக்கு இந்த பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். குரூர பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் எமக்கு கிடைத்த அனுபவத்தை பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாம் தயாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டின்போது உக்ரேன் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்தார்.