மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்கென கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் உட்பட்ட பொருட்களை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பிரிவு மாணவன் ஆர். எம். சமித்தஜீவன் கையளிப்பதைப் படத்தில் காணலாம். உபவேந்தர் பேராசிரியர் திருமதி சானிகா ஹிரும்துரேகம, சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி பிரேமகுமார மற்றும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.
March
March
![]()
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பலமுறை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.
இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.
பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.
விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார். தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்
சிவிலியன்களை மீட்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக இராணுவத் தாக்குதல் படையணிகள் சுற்றிவளைத்துள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
களநிலையில் மிக உக்கிரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் நேற்று (மார்:19) புலிகளின் தடைநிலைகள் மீது கடும் தாக்குல் நடத்தி அவர்களுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 9வது கெமுனுப் படையணியினர் 11 எல்ரிரிஈயினரின் உடல்கள் 17 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 26 கைக்குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர்.
இதேவேளை இரணப்பாலைப் பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 7வது சிங்கப் படையினர் 3 உயர் நவீன தொடர்புசானங்கள் இரு பிரதான நிலைய தொடர்பு சாதனங்கள் மற்றும் இரு கொண்டு செல்லக்கூடிய தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இப்பகுதியில் நிலைகொன்டுள்ள 58 வது டிவிசன் படைப்பிரிவின் ஸ்ணைபர் படையினர் 13 புலிகளை கொன்றுள்ளனர். மேலும் படையினர் புதுக்குடியிருப்புக்கு கிழக்காக புலிகளால் கைவிடப்பட்ட கடற்புலிகளின் முகாமைக் கைபற்றியுள்ளதுடன் இம்முகாமிலிருந்த உயர் நவீன தொடர்புசாதனங்கள், செய்மதி அன்ரனாக்கள், வடிவமைக்கப்பட்ட படகுகள், சிறிய நீர்மூள்கி இயந்திரம், கொம்பியூட்டர்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1983 சிவிலியன்கள் பாதுகாப்புத் தேடி 58வது டிவிசன் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 3 மாதகால விடுமுறைக்கு சபை நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கான விடுமுறைப் பிரேரணைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அக் கட்சியின் சக உறுப்பினர்களான ரி.கனகசபை, கே.பத்மநாதன், கே.துரைரட்ணசிங்கம், சொலமன், எஸ்.சிரில் ஆகியோர் முறையே மேற்குறித்த உறுப்பினர்களுக்கான விடுமுறையை பிரேரணைகளைச் சமர்ப்பித்து நேற்றைய தினம் (19.03.2009) தொடக்கம் 3 மாத காலத்துக்கு விடுமுறைகளுக்கான அனுமதியைக் கோரினர். இதனையடுத்து சபையினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியருள் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவியர் பலர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுள் 26 மாணவியர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வாதிப்பதற்ற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
எனினும் சீனா ‘இது இலங்கையின் உள்விவகரம்’ எனவும் ‘இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை’ எனவும் தெரிவித்து பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் கலந்துரையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
மோதல் பகுதிகளிலிருந்து வெளியே வரும் மக்களுக்கு அவசர மருத்துவ, உளவியல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போதும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாகவும் இந்த சர்வதேச அமைப்பு தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.
வன்னியிலிருக்கும் சுமார் 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வெளியேறியோரில் அநேகமானோருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் அநேகமானவை சிதறல்களாலும் (ஆயுத) சுடப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. எந்தத் தரப்பையும் அந்த அமைப்பு குற்றம் சாட்டவில்லை.
பலர் உறவினர்களையும் முழுக் குடும்பத்தினரையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமது குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ தொடர்பு இல்லை. அவர்கள் எங்கு சென்றுவிட்டனர் என்பதும் உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் அவர்களுக்கு தெரியாது. 40 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் 70 ஆயிரத்திற்கும் குறைவானோரே வன்னிப்பகுதியில் இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. முகாம்களில் வேலையோ, பாடசாலையோ இல்லை. சுயாதீனமான சகலவற்றையும் அவர்கள் இழந்துவிட்டனர். தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு தொடர்பான தொடர்ச்சியான பீதியுடனேயே அவர்கள் இருக்கின்றனர் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.
இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது
விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் மீது குறைகூறும் சர்வதேச சமூகம் தப்பிவிடும் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் புலிகளின் செயல் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையினூடாக விரைவிலேயே வடக்கின் அனைத்து பகுதிகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதியில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? என கேட்கலாம்.
றிப்பாக வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன் மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்கவும் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் ஊடாக அவர்களது பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்யும் நிலைமையை உருவாக்குதல். நானே மக்களின் பிரதிநிதி என ஒருவர் தெரிவிப்பதை விடுத்து உண்மையான பிரதிநிதியை மக்களே தெரிவு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குதல், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியுடனேயே நாம் பேசுவோம்.
அதுமட்டுமல்ல வடக்கையும், கிழக்கையும் பிரதானப்படுத்தி நாடுமுழுவதும் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளல் இதுவே எமது இலக்காக இருக்கிறது. இதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முப்படையினர் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. உண்மையிலேயே அவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு படையில் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தொண்டர் அடிப்படையில் இருப்பவர்களதும் சேவைகள் சம மானவை. எனினும் ஓய்வூதிய வழங்குதலில் சமநிலை பேணப் படவில்லை. நீண்டகாலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதி இந்த திருத்தச் சட்டத்தினூடாக தீர்வு வழங்கப்படுகிறது என் றும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
படையினர் வெற்றிகளைக் குவித்து வருகின்ற இவ்வேளையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
கருணா அணியினர் 2,000 பேரோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஆயுதங்களோடு திரிகின்றனர். இந்த வகையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தற்கொலைப் படையினர் உள்ளனர். தெற்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை இதனுடன் தொடர்புபடுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது.
நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும். ஆயுதத் தாங்கியுள்ளமை ஒரு பிரச்சினை இல்லை.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென கூறும் அரசாங்கம் கருணா, பிள்ளையான், பிரபாகரன் என சகலரும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அரசாங்கம் சகலருக்கும் ஒரே விதமான சட்டங்களைப் பிரயோகிக்க வேண்டும். தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜே. வி. பி. யும் கருணாவும் இப்போது அரசாங்கத்திற்குள் உள்ளனர். கருணாவையும் விமல் வீரவன்சவையும், அருகில் வைத்துக் கொண்டே தலதா மாளிகை மீதான தாக்குதல் பற்றி அரசாங்கம் பேசுகிறது.
பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் விவாதித்துப் பேசும் போதே தயாசிறி ஜயசேகர (ஐ.தே.க. எம்.பி) மேற்கண்டவாறு தெரிவித்தார்.