படையினர் வெற்றிகளைக் குவித்து வருகின்ற இவ்வேளையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
கருணா அணியினர் 2,000 பேரோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஆயுதங்களோடு திரிகின்றனர். இந்த வகையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தற்கொலைப் படையினர் உள்ளனர். தெற்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை இதனுடன் தொடர்புபடுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது.
நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும். ஆயுதத் தாங்கியுள்ளமை ஒரு பிரச்சினை இல்லை.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென கூறும் அரசாங்கம் கருணா, பிள்ளையான், பிரபாகரன் என சகலரும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அரசாங்கம் சகலருக்கும் ஒரே விதமான சட்டங்களைப் பிரயோகிக்க வேண்டும். தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜே. வி. பி. யும் கருணாவும் இப்போது அரசாங்கத்திற்குள் உள்ளனர். கருணாவையும் விமல் வீரவன்சவையும், அருகில் வைத்துக் கொண்டே தலதா மாளிகை மீதான தாக்குதல் பற்றி அரசாங்கம் பேசுகிறது.
பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் விவாதித்துப் பேசும் போதே தயாசிறி ஜயசேகர (ஐ.தே.க. எம்.பி) மேற்கண்டவாறு தெரிவித்தார்.