சிலர் வெளிநாடுகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு இலங்கையை பற்றித் தவறான தகவல்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இங்குள்ள சிலரும் துணை போவதற்கு ஏற்றால் போல் தவறான தகவல்களையும் வழங்கி வருகிறார்கள்.
இலங்கையில் மிகவும் ஒழுக்க சீலமான முப்படையினர் இருக்கிறார்கள். முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் குறைவின்றி அனுப்பப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் தகவலின்படி 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மக்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் சேர்த்துத்தான் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இன்று மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஒய்வூதியம் வழங்கல் விதவைகள் ஓய்வூதிய வழங்கல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மிக முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் ஐ. தே. க. உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை. ஐ. தே. க.வினருக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கான தார்மீக பொறுப்பும் இருக்கிறது. இதனையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன்.