உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.
இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது