27

27

புலிகள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்க தாய்லாந்திடம் இலங்கை கோரிக்கை.

thai.jpgவிடுதலைப் புலிகள் கொழும்புக்கு எதிராக தாய்லாந்தை பயன்படுத்துவதனை தடுப்பதற்கு அவர்களது நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு இலங்கை அந்நாட்டிடம் கோரியுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரான ஹஸிட் பிரேமயாவை நேற்று வியாழக்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்

நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு

ipl-images.jpgதென் ஆப்ரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடரின் துவக்கப் போட்டி ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கப் போட்டி கேப்டவுனிலும், இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் மே 22ஆம் தேதி பிரிடோரியாவிலும், மே 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கும் என்றும், இவை கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க், டர்பன், பிரிடோரியா, ஈஸ்ட் லண்டன், கிம்பெர்லி, ப்லோம்ஃப்ன்டெய்ன், போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் நடத்தப்படும் என்றும் ஐ.பி.எல் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டர்பனின் கிங்ஸ்மெய்ட் மைதானத்தில் 16 போட்டிகளும், பிரிடோரியாவின் செஞ்சுரியன் மைதானத்தில் 12 போட்டிகளும், ஜோஹன்ன்ஸ்பர்க்கின் வான்டெரர்ஸ் மைதானம், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தலா 8 போட்டிகளும், போர்ட் எலிசபெத் நகரின் செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 7 போட்டிகளும், ஈஸ்ட் லண்டனில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இரண்டு புலிகள் ஆயுதங்களுடன் கைது.

pisto.jpgதிருமலை உப்புவெளி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இரு புலிச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் நான்கு கிரனேட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் திருமலைப் பிரதேசத்தில் ஊடுருவி இருந்து ஆங்காங்கே தாக்குதல் மேற்கொள்ளும் குழுவொன்றிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இல‌ங்கை‌க்கு இராணுவ உத‌வி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை: இ‌ந்‌திய கட‌ற்படை தளப‌தி சுரேஷ் மேத்தா

sures.bmp
இலங்கைக்கு இ‌‌ந்‌திய அரசா‌ல் இராணுவ உதவி வழங்கப்படவில்லை என்று‌ம் இதுபோ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ஆதாரம‌‌ற்றது எ‌ன்று‌ம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்கவில்லை. இது போன்ற குற்றச்சா‌ற்றுகள் ஆதாரமற்றது எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று விவாதம்?

un-logo.jpgஇலங்கை யில் நடைபெற்று வரும் போரில், பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடைபெறுகிறது.

ஐ.நா., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இதர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இந்த விவாதத்துக்கு சபையின் மனித உரிமைகள் விவகார தலைவர் ஜோன் ஹோம்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த விவாதத்துக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் இராணுவத்துக்கும், அந்த நாடு தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு உள்நாட்டுப் போர். இந்த போரினால் உலக நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆகவே இது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கத் தேவை இல்லை என்று சீனாவும், ரஷ்யாவும் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் கூறினார்கள்.

இலங்கையில் வேலையின்றி தவிக்கும் 49 ஆயிரம் தமிழ் விதவைகள்: ஐ.நா. கவலை

இலங்கையில் சுமார் 49 ஆயிரம் தமிழ் விதவைகள் வேலை ஏதும் இன்றி வாழ்க்கை நடத்த முடியாமல் பரிதவித்து வருவதாகவும், இதில் 35 ஆயிரம் பேர் 30-க்கும் குறைவான வயதை உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு விஷமானதென்று மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் இல்லை.

t-mala-stu.pngதிருகோண மலையில் உணவு விஷமானதென்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து திருகோணமலை மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் ஏற்படவில்லையென கிழக்கு மாகாண பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உணவு விஷமடைந்தமை தொடர்பாக டாக்டர் இ.ஜி.ஞான குணாளனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் இவ் அறிக்கையின் பிரதி கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்

26-ramsoss.jpgஇலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியற்ற பட்டங்களுக்குத் தடை – எஸ்.பி. அரசுக்கு நன்றி

spdesanayaka.jpg
அமைச்சர்களுக்கு சட்ட ரீதியற்ற வகையில் கலாநிதி, தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்கள் வழங்குவதைத் தடை செய்ய குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது.  இது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்களின் பட்டங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.