இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.
கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.
chandran.raja
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை கவர்வதற்கு எத்தனை சாதுரியங்கள் இருக்கோ அத்தனை சாதுரியங்களையும் கையாளுவார்கள். புலம்பெயர் தமிழ்மக்களின் பணத்தை கவர்வதற்கு புலிகள் என்னென்னவாய் “றீல்” விட்டார்கள். டாக்டர் ராமதாஸ்க்கு இலங்கை தமிழரை வைத்து ஒரேஒரு “றீல்” விட உரிமையில்லையா? இதற்கெல்லாம் போய் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கலாமா? அப்படியென்னா தேர்தலுக்கு அர்த்தம் என்னையா?
அவனவன் பால்மாடு ரி.வி அரிசி பருப்பு தாலி சீலை எனென்னு அறிக்கை விட்டுகிட்டேயிருக்கான் நாம அதுவும் தூரத்திலையிருக்கிற தமிழருக்காக ஒன்னு விடகூடாதா? இங்கையிருக்கிற அகதிகளுக்காக ஏதாவது கொட்டிஉளறுனால் தானே பிரச்சனை! இது அப்படி ஒண்னும் மோசமில்லையே.
பார்த்திபன்
இராமதாஸ் ஐயாவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கொருமுறை தேர்தல் வரும் போது இப்படி அறிக்கை விடத் தவறுவதில்லை. ஆனால் அறிக்கை விடுவது மட்டும் தமிழீழம் கிடைத்தது போலாகிவிடும் என்று நினைக்கின்றார் போலும். ஆனால் ஐயாவிற்கு ஒன்று தெரியுமோ தமிழக பிரபல பத்திரிகை நடாத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் பலர் ஈழத்தில் தமிழருக்கு விடிவு கிடைக்க வேண்டும். அதற்காக ஈழப்பிரைச்சினை இந்திய தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்கள். இவ்விடயம் ஏற்கனவே திருமங்கலம் தொகுதி தேர்தலின் போதும் வெளிப்படையாகத் தெரிந்தது. திருமங்கலம் தேர்தல்க் களம் தான் ஈழவிடுதலையின் தீர்ப்பை வழங்கும் களம் என வைகோவும் அறிக்கை விட்டார். ஆனால் தேர்தல் பிரச்சார்த்தின் போது அவர் கூட இவ்விடயத்தை முன்னிறுத்திப் பிரசக்சாரம் செய்யவில்லை என்பது பலர் அறிந்ததே.
பல்லி
என்னுடைய கேள்வி அன்புமணி இப்போ எந்த கூடணி??