திருகோண மலையில் உணவு விஷமானதென்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து திருகோணமலை மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் ஏற்படவில்லையென கிழக்கு மாகாண பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உணவு விஷமடைந்தமை தொடர்பாக டாக்டர் இ.ஜி.ஞான குணாளனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் இவ் அறிக்கையின் பிரதி கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.