2009

2009

மைக்கல் ஜக்சன் ‘கையுறை அதிக விலைக்கு ஏலம்

michel_jaksonss.jpgபாப் உலகில் முடிசுடா மன்னனாக திகழ்ந்த மறைந்த மைக்கல் ஜக்சனின் வெள்ளை நிற கையுறை, அவுஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. அவரது அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவரால் 10 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த உறை விலையுயர்ந்த கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதாகும்.  இது ஏலத்தில் விடப்பட்ட போது போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்களை தோற்கடித்து வார்விக் ஸ்டோன் என்பவர் 57 ஆயிரத்து 600 அவுஸ்திரேலியன் டொலருக்கு வாங்கினார்.  இந்த “கையுறை’  ஏற்கனவே 30 ஆயிரம் டாலர் மதிப்பிடப்பட்டு இருந்தது.

எனினும் இரு மடங்கு விலையில் ஏலம் போய் உள்ளது. ஜக்சனின் மறைவுக்கு பின் ஏலத்தில் விடப்பட்ட அவரது முதல் பொருள் இந்த கையுறையாகும்;. 

ஐ.ரி.என். ஊடகவியலாளர் சுரேஷ் விபத்தில் மரணம்

110909itn-rep.jpgசுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளரான சுரேஷ் விக்கிரமசிங்க (35) நேற்று (10) தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி வாகன விபத்துக்குள்ளான சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஊடகவியலாளரான சுரேஷ¤ம் அவரது மனைவியும் கோட்டே பெத்தகான சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனமொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகன சாரதியின் தவறின் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

சுரேஷ் விக்கிரமசிங்கவின் மனைவியான வாசனா விக்கிரமசிங்க இவ்விபத்தினால் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைபெற்றுவரும் நிலையில், சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்றுவந்தார்.

சுரேஷ் விக்கிரமசிங்க கடந்த 2001 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி சேவையில் இணைந்துகொண்டார். செய்தி வாசிப்பாளர், செய்தி தயாரிப்பாளர், செய்தி சேகரிப்பாளர் என்ற பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்த சுரேஷ், சிறந்த புகைப்பட கலைஞருமாவார். இவர் ஒரு பட்டதாரியாவார்.

உயிரிழந்துள்ள ஊடகவியலாளரான சுரேஷின் பூதவுடல் கொஸ்கம, பஹலகமவிலுள்ள 372/2 இலக்கத்தைக் கொண்ட அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறும்.

‘ஊடகச் செய்திகளால் இந்தியா – சீனா உறவு பாதிக்கக்கூடாது’

100909media-teaching.jpgபத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்க அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியாவை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பாறை ஒன்றில் சிவப்பு பெயின்டினால் சீன எழுத்துக்களை எழுதிவிட்டு சென்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்தி வெளியாயின.

ஆனால் சீனாவும், இந்தியாவும் இதனை மறுத்திருந்தன.

இந்நிலையில் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவுத்துறை அமைச்சக பேச்சாளர் ஜியங் யு – விடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவை பாதிக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றார்.

மேலும் இந்திய – சீன சிறப்பு பிரதிநிதிகளிடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பயனுள்ள எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுவதை பற்றி கேட்டபோது, இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு நியாயமான, நேர்மையான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை காண்பதற்கான பணிகளில் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறினார்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 7 மாடிக் கட்டடம்

viswa-999.jpgகொழும்பு பல்கலைக்கழக பட்ட பின்படிப்பு பிரிவுக்கு 7 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரமளித்தது.

இதற்கான பிரேரணையை உயர் கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால முன்வைத்திருந்தார். இதன்படி 70 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 405 மில்லியன் ரூபா செலவில் 7 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டடம் அமைக்கப்படும்.

இத்திட்டத்தை அமுல்படுத்த தனியார் நிறுவனங்களினதும் வெளிநாடுகளினதும் நிதியுதவி பெற்றுக்கொள்ளப்படும். 2009/2010 வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் பணிகள் முடிவுக்குக் கொண்டவரப்படும்.

பள்ளி நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலி – 5 மாணவிகள் பலி

புதுடெல்லியில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 5 மாணவிகள் பலியாகியுள்ளனர்.  மேலும் முப்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் சிலரின் நிலை கவலைக்குறியதாக உள்ளது.

மழையால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பள்ளிக் கட்டிடத்தில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த பள்ளிக்கு வெளியே கோபம் கொண்ட பெற்றோர்கள் கூடியதும் அந்தப் பகுதியில் இருந்தோரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்திய அரசு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.

ஆடம்பர ஹோட்டல்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கை

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்களை தாக்குவது கடினமா கவுள்ளதால் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 2001 ம் ஆண்டு தாக்கப்பட்ட பின் பயங்கரவாதத்துக் கெதிரான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.

பாதுகாப்புகளும் கடுமையாக்கப்பட்டன.  இதனால் பயங்கரவாதிகளின் இராணுவ, அரசியல் இலக்குகள் தோல்வியடைகின்றன. சில தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்கவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தவும் பயங்கரவாதிகள் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஹோட்டல்களும், நலன்களுமே தாக்குதலுக் குள்ளாகலாமென அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் வெள்ளத்தால் பலியானோர் தொகை 31

110909turky.jpgதுருக்கி யில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் தொகை 31ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமிரவு துருக்கியில் பாரிய மழை பெய்தமையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியுள்ளனர். ஐம்பது வருடங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அறிவிக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மக்கள் கூரைகளிலும் வாகனங்களிலும் ஏறி காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பினர். சிலர் உயர்ந்த வாகனங்களுக்கு மேல் ஏறி நின்றனர். ஆனால் காட்டு வெள்ளம் போல் பாய்ந்து வந்த வெள்ளம் வாகனங்களையும் அடித்துச் சென்றது. தொள்ளாயிரம் தீயணைப்புப் படையினர் ஆறு இராணுவ ஹெலிகொப்டர்கள், முப்பது பாரம் தூக்கி இயந்திரங்கள் என்பன மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் 18 பேரின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் பல பெண்களும் இறந்து கிடந்தனர். உள்துறை அமைச்சர் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மேலும் மழை பெய்யலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

துருக்கிய பிரதமர் தையிப் எடார்கன் தலைநகர் ஸ்தான்புலுக்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார். இதுவரை ஆயிரம் பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு உதவ கிரேக்கம் முன்வந்துள்ளது.

கூடாரங்கள், உணவுப் பொருட்கள், உடுதுணிகள் ஆகியவற்றை எகிப்தின் செம் பிறைச் சங்கம் வழங்கி வருகின்றது. வெள்ளம் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்தோரின் புள்ளி விபரங்களை மதிப்பீடு செய்ய துருக்கி உள்நாட்டமைச்சு உத்தரவிட்டுள்ளது. 150 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெள்ளத்தில் நஷ்டமடைந்துள்ளன.

வாகனங்களைத் திருடி உதிரிப்பாகங்களை விற்று வந்த இருவர் கைது

nimal_madiwaka.jpgவாகனங் களை கொள்ளை யிட்டுச் சென்று அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்துவந்த இருவரை வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கொள்ளையிட்டு வைத்திருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

வவுனியா விஷேட பொலிஸ் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இறம்பைக்குளம் பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த அதேசமயம் அவர்களிடமிருந்து வாகனங்களையும் மீட்டெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் இருவர் மேற்கொண்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும், வாகன உரிமையாளர்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் – ராகுல்காந்தி

100909-rahul.jpgதமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி  பேசுகையில், இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல் வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது.

rajitha_senarathna00jpg.jpgதெற்கில் தேர்தல் நடைபெறுகிறபோதும் குருணாகலையில் அகிலா விராஜ் காரியவசத்தை காப்பாற்றும் போட்டியிலே ஐ.தே.க. தலைவர் இறங்கியுள்ளார். ஐந்து சதம் கூட பெறுமதியில்லாத மங்கள சமர வீரவை இணைத்துக் கொண்டதால் ஐ.தே.க. தலைவருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தெற்குத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.தே.க. வுக்கு இரு ஆசனங்கள் வீதம்தான் கிடைக்கும் ஜே.வி.பி.க்கு முழு மாகாணத்தில் இருந்தும் ஒரு ஆசனம் கிடைப்பது கூட கஷ்டமான காரியமாகும்.மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது

இது வரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க. வின் வாக்குகள் 19 இலட்சத்தினால் குறைந்துள்ளன. இந்தத்தொகை தென் மாகாண தேர்தலின் பின்னர் 23 இலட்சமாக அதிகரிக்கும். ஐ.தே.க. வில் இருந்த பெரும்பாலான மக்கள் இன்று ஐ.ம.சு.மு. உடனே கைகோர்த்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது. ஆனால் எவரையும் பிடிக்க முடியாது ஐ.தே.க. திண்டாடுகிறது.