23

23

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – 31 பேர் வரை பலி !

ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயம் ஆகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹிஜாப் போராட்டம் 50 நகரங்களில் தீ வைப்பு 31 பேர் பலி Today Tamil Kids News  Iran # World Best Tamil - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய  வழிகாட்டல்கள்

சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணியாத மாசா அமினி என்ற 22 வயது பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து கடந்த 18-ந்திகதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் ஈரானில் குர்க்கிஸ்தான் மாகாணத்தில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது 30க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவி விட்டது.

பெண்களின் இந்த தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் மனித உரிமை அமைப்பு இயக்குனர் தெரிவித்து உள்ளார். ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி, கனடா போன்ற நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார் !

புக்கர் பரிசு பெற்ற பிரித்தானியா எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில்,

” எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு பேரழிவு தரும் இழப்பு. அத்தகைய அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் முடியும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஐ.நாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் !

இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி The Island  பத்திரிகை இது தொட்பாக நேற்று (21) செய்தி வௌியிட்டுள்ளது.

மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள்  உள்ளிட்ட  அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1987 ஜூலை முதல் 1990  மார்ச் வரையான காலப்பகுதியில்  இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,   இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே  மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, UN Advocacy, FORUM-ASIA, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சார்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.