November

November

“கொரோனா பிரச்சினையை கட்டுப்படுத்த மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றமையே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஜனாதிபதி,

“கொரோனா வைரஸின் பரவலுக்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பு இல்லை. கொரோனா தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.அந்த பொறுப்பில் அவர்கள் தோல்வியுற்றதால் தான் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது.

மேல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி, எல்ல போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளனர். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே எடுக்க முடியாது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.  அத்தோடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் எவரும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம். அதற்கு பதிலாக அவர்கள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

ஒன்பது இலக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அதன் பிளேஓஃப்ஸ் சுற்று கனவை சிதைத்தது சென்னை !

அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பஞசாப் இந்த போட்டியில் களமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எல். ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, கெய்ல் 12, பூரன் 2 என சொற்ப ஓட்டகளில் ஆட்டமிழந்தனர்.
6-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ஓட்டங்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் அடித்தது.
தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்
சென்னை சார்பாக லுங்கி நிகிடி 3 இலக்குகளை  வீழ்த்தினார்.
பின்னர் 154 ஒட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணியின்  ஓட்டங்கள் 82 ஆக இருக்கும் போது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 பந்துப்பரிமாற்றங்களில் 1 இலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து 09 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே 9 விக்கெட்டில் அபார வெற்றி: பஞ்சாப் அணி வெளியேறியது
 இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஓஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். சென்னை அணி ஏற்கனவே தன்னுடைய பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.