27

27

100 ஐ தாண்டிய இலங்கை கொரோனா உயிர்ப்பலி – இன்று மட்டும் எட்டு பேர் பலி! 

நாட்டில் இன்று மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை நூறைக் கடந்து 107ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிஞ்ச் – ஸ்மித்  அதிரடி ஆட்டம் – தோல்வியுடன் தொடரை ஆரம்பித்தது இந்தியா !

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அவுஸ்ரேலியா.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 6 இலக்குகள் இழப்புக்கு 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 114 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 105 ஓட்டங்களையும், கிளென் மேக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் இந்தியாவுக்கு 375 ரன்கள் வெற்றி இலக்கு

இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 இலக்குகளையும், பும்ரா, நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்தி சஹால் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 375 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகள்கள் இழப்புக்கு 308 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியக்  அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா 90 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 74 ஓட்டங்களையும் நவ்தீப் சைனி ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 இலக்குகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 3 இலக்குகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் இதே சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நீதிமன்றங்களின் தடையுத்தரவுகளையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் அரசியல்தலைமைகள் !

இந்த வருட மாவீரர் தின நினைவேந்தலுக்கான தடைகள் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டதுடன் குறித்த தடையை மீறுவோர் தொடர்பாக பொலிஸாரினால் தீவிரமாக கவனிக்கப்பட்டும் வரப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தமிழ்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் மாவீரர் தின நினைவேந்தலை தங்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் நினைவேந்தியுள்ளனர்.

மேலும் யாழில் நினைவேந்தல் செய்வதற்கான ஆயத்தப்படுத்தலில் ஈடுபட்டிருந்த அருட்தந்தை ஒருவர் யாழ்பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறையில்உள்ள தனது இல்லம் மற்றும் அலுவலகம் என்பன சேர்ந்த இடத்தில் சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளார்.

IMG 1275

மாவீரர்தின நினைவேந்தலுக்கான விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வு யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் இல்லத்திற்கு முன்னால் நினைவேந்தலை நடத்தியுள்ளார்.

VideoCapture 20201127 181149

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தியுள்ளார்.

1201d230 8bdf 40da a36d c28f4b085bf4

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் நினைவேந்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். நினைவேந்தலை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்” என தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வீட்டில் நினைவேந்தலை அனுஷ்டித்துள்ளார்.

இவர்களை தவிர இன்னும் பலரும் நீதிமன்ற தடையுத்தரவை மீறி மாவீரர்தினத்துக்கான நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அதே வேளை வட – கிழக்கின் பல பகுதினகளிலும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு முன்னால் நினைவேந்தலில் ஈடுபட்டமையையும் குறிப்பிடத்தக்கது.

IMG 5448

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது !

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரன் என்பவரே இவ்வாறு யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அருட்தந்தை தற்போது யாழ்ப்பாண காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் இறந்து போன 300ற்கும் அதிகமான ஒட்டகங்கள்! 

துபாய் புறநகர் பாலைவன பகுதிகளில் ஏராளமான ஒட்டகங்கள் வசித்து வருகின்றன. இந்த ஒட்டகங்களின் நலனை பராமரிக்க மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்கவத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பாலைவன பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஒட்டகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

பாலைவன பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அங்கு உயிரிழந்த ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடுகளின் அருகே மூட்டையாக பிளாஸ்டிக் குவியல்கள் இருந்தன. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது அவை அனைத்தும் அந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் குவியல் மட்காமல் வெகு நாட்களாக பாலைவன பகுதியில் அப்படியே கிடந்துள்ளது. இது குறித்து துபாய் மத்திய கால்நடை ஆய்வகத்தின் அறிவியல் இயக்குனர் டாக்டர் உல்ரிச் வார்னெரி கூறியதாவது:-

வயிற்றை நிரப்ப பிளாஸ்டிக்குகளை உணவாக அந்த ஒட்டகங்கள் உட்கொண்டுள்ளன. இது உண்மையில் வேதனையளிப்பதாக உள்ளது. இதன் மூலம் சீரணமாகாமல் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். பட்டினி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் ஒட்டகங்கள் பிளாஸ்டிக்கை உணவாக சாப்பிடுகிறது.

தற்போது இதுபோன்ற ஒட்டகங்கள் அடையாளம் காணப்பட்டு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. பாலைவன பகுதிகளில் சுற்றுலாவுக்கு வருபவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால் அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட நேரிடுகிறது. எனவே பொதுமக்களுக்கும் ஒட்டகங்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் விதமாக சுகாதாரமாக கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை பிளாஸ்டிக்கை உட்கொண்டு சுமார் 300 ஒட்டகங்கள் பாலைவன பகுதியில் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஒட்டகங்களின் வயிற்றில் சுமார் 53 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை! 

துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் எர்டோகன் அந்த புரட்சியை முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

அதன்படி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவ அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவ கமாண்டர்கள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் மீதான வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது.

இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் சரியாக எத்தனை பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவலை துருக்கி நீதித்துறை வெளியிடவில்லை.

LPL 2020 – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது கொழும்பு கிங்ஸ் !

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் (LPL) போட்டித் தொடர் நேற்று மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 03 இலக்குகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டதனால் காரணத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.

கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக தினேஸ் சந்திமால் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளிற்கு முகநூலில் வாழ்த்து பதிவிட்ட நால்வர் கைது! 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்ததினத்தையிட்டு நேற்று (26) அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்து 3 நாட்கள் காவல்துறை தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர் .

இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான தரப்படுத்தலில் யாழ்.பல்கலைகழகத்துக்கு மூன்றாவது இடம்!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம்  மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது.

2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, போதனை சார் வள ஆளணியினரின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், ஆராய்சிக் கட்டுரைகளின் சர்வதேச சமர்ப்பணம் போன்ற பல அளவு கோல்களின் அடிப்படையிலேயே இந்தத் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கஜேந்திரகுமார்பொன்னம்பலத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் மணிவண்ணன் !

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத் தவணையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், அவரை உறுப்புரிமையில் நீக்கியதற்கு இடைக்காலத் தடை கட்டளையை வழங்கி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீடிக்க வழிசமைக்கப்பட்டது. எனினும் இந்த உத்தரவை மதிக்காது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தம்மை அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகரசபை நடவடிக்கைகளில் செயற்படமுடியாது என்று மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று மனுதாரர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.