விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பபட்டது.
02
02
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான திட்ட முன்மொழிவுகள் நேற்று (01.11.2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இப்பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தலைமையிலும், சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு. மோகனதாஸ் தலைமையிலும் பேரவையினால் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம்” என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம்(02.11.2020) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தெருக்களில் நாய்கள் வெறிப்பிடித்தது போல முன்தீர்மானம் மற்றும் ஏற்பாடுகள் இன்றி அரசாங்கம் திடீரென 5 நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை மேல்மாகாணத்தில் அமுல்படுத்தியது. பின்னர் திடீரென அந்த ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. தினமும் தொழிலுக்குச் சென்று வருமானம் பெற்று உணவுகொண்டவர்கள் அநேகம்பேர் இருக்கின்றனர்.
இதன் காரணமாக இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொவிட்-19 தொற்றானது கடந்த வருட இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டதுடன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எமது நாட்டில் பரவத்தொடங்கியது.
அப்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தொற்றின் அபாயகரமான விடயங்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்தார். ஆனால் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, ஏற்ற ஏற்பாடுகளை செய்யவுமில்லை. இன்று அதன் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை அரசாங்கம் செய்தாலும் எத்தனையோ பேருக்கு இந்த உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும் என்றார்.
“மக்களினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை, வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவேண்டும்” என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். மேலும், 20வது திருத்தத்தின் ஊடாக இலங்கை மிகவும் வலுவான நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி, கொரேனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். மக்களினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை, வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவேண்டும்.
இதேவேளை, அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
“முகமது நபி குறித்த கேலிச்சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’ என்ற வார இதழில் முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரம் கடந்த மாதம் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இது அங்குள்ள முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், கடந்த மாதம் 17-ம் தேதி பாரிசில் உள்ள பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபிகளின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்து கருத்து சுதந்திரம் குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த தகவல் அங்கு காட்டுத் தீயாக பரவியதை அடுத்து, அன்றைய தினமே அந்த ஆசிரியரை ஒரு கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்தது. போலீஸ் விசாரணையில், அவர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பு தணியும் முன்பாகவே, பாரிஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த 3 பேரை கத்தியால் தாக்கினார். இதில் அவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொலையாளி, மருத்துவமனையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த அன்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இஸ்லாம் மதம் குறித்து சில கருத்துகள் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், மற்ற முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாரிஸில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.
யாழ்ப்பாணம் – மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று(01.11.2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
23 வயதான சி.வினோதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடைய மனைவி வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் இச் சம்பவம் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்
( http://thesamnet.co.uk/?p=65967 )
மக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றமையே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஜனாதிபதி,
“கொரோனா வைரஸின் பரவலுக்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பு இல்லை. கொரோனா தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.அந்த பொறுப்பில் அவர்கள் தோல்வியுற்றதால் தான் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது.
மேல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி, எல்ல போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளனர். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே எடுக்க முடியாது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அத்தோடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் எவரும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம். அதற்கு பதிலாக அவர்கள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.
எதிர் வரும் அமைச்சரவையில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி திகதியை உறுதிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் நிலவரங்கள் சிலவேளை சந்திப்புகளை தாமதப்படுத்தலாம். ஆகவே நான் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தமிழக முதல்வரை சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை காண்பதற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.