19
19
இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.
உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.
இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.


