பிஞ்ச் – ஸ்மித்  அதிரடி ஆட்டம் – தோல்வியுடன் தொடரை ஆரம்பித்தது இந்தியா !

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அவுஸ்ரேலியா.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 6 இலக்குகள் இழப்புக்கு 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 114 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 105 ஓட்டங்களையும், கிளென் மேக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் இந்தியாவுக்கு 375 ரன்கள் வெற்றி இலக்கு

இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 இலக்குகளையும், பும்ரா, நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்தி சஹால் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 375 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகள்கள் இழப்புக்கு 308 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியக்  அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா 90 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 74 ஓட்டங்களையும் நவ்தீப் சைனி ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 இலக்குகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 3 இலக்குகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் இதே சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *