பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று அமெரிக்கா செல்கிறார் என ஏசியன் ரிபியூன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது கலிபோர்ணியா நேவாடா மாநில இலங்கையரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், இராணுவத்தினரின் வீட்டுத்திட்டத்திற்காக “நமக்காக நாம்” என்ற நிதியத்தையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
June
June
வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழுகின்ற மூன்று இலட்சம் மக்களையும் மீண்டும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும், இதனைப் பிற்போடக் கூடாதெனவும் யாழ். ஆயர் அதிவண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் வானொலிக்கு ஆயர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அந்த மக்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டு உள் கட்டமைப்பு வசதிகள் சீராகச் செய்ய வேண்டும் எனவும் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.
தொண்டர் நிறுவனங்களை அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. பணியாளர்கள், கரித்தாஸ் நிறுவனம் என்பன மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்
இலங் கையில் தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படும்வரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.
இலங்கையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் அதேநேரம், தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“மோதல்கள் முடிந்த பின்னர் முகாம்களுக்குள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் நீக்கப்பட்டு, அனுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல முன்னேற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன” என்று அவர் கூறினார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வடபகுதிக்குச் சென்று அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மனிதநேய அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென தாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அழுத்து வருவதாகவும் பிளேக் சுட்டிக்காட்டினார்.
மோதல்களுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னேடுக்கும் நடவடிக்கையானது மனிதநேயம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்தவையாக இருக்குமெனவும் பிளேக் தெரிவித்தார்.
செட்டி குளம் நிவாரண கிராமங்க ளில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்கும் நிலைய மொன்று இன்று சனிக்கிழமை வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பாரியார், முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். ஆதரவற்ற சுமார் 300 சிறுவர், சிறுமியர்கள் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர்.
“நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்” என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது :
“இலங்கையைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த அமைப்பு பிரபாகரன் என்ற தனி மனிதனிலேயே தங்கியிருந்தது. இப்போது அவரும், அவரது தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் .இப்படியான சூழ்நிலையில் இனி ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பே இல்லை.
அதே நேரம், வெளிநாடுகளில் நிறைய நிதி மோசடிகள் செய்தவர்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்தும் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்காகவும், அரசியல் ரீதியாக சில அமைப்புகளைக் கட்டியெழுப்பலாமா என்பது குறித்தும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தான் கடந்த வாரம் நாடு கடந்த நிலையில், ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்கள். இது வேடிக்கையானது. இயலாத காரியமும் கூட. காரணம், நிழல் அரசாங்கம் என்பது சர்வதேச சட்டத்தில் ஓர் அம்சமாக இருந்தாலும், அதனை இன்னொரு நாடு அங்கீகரித்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லை.
விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் போது, அதனை அங்கீகரிக்காத நாடுகள், அவர்கள் அழிந்து போயிருக்கும் இன்றைய நிலையில் அங்கீகரிக்கமாட்டாதுஆகவே புலம் பெயர்ந்துள்ள மக்கள் தற்போது உண்மை நிலையை உணர்ந்து விட்டார்கள் “என்றார்.
ஜாக்சனின் திடீர் மறைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அட்டாப்சி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே முடிவுகள் தெரிய வரும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், சோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் கவுன்டி உதவி தலைமை தடயவியல் அதிகாரி எட்வின்டர் கூறுகையில், ஜாக்சனின் உடல் எங்களது அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவரது குடும்பத்தினரின் கோரிக்கைப்படி அவரது உடல் பெயர் சொல்லப்படாத இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாய மொழியாவதாக அரசியல் சாசன அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் அரச பணிகளில் இணைந்து கொள்ளும் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் சித்தியடையாதோர் அரச பணிகளுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள்.
அரசசேவையில் உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச காரியாலயங்களில் சிறுபான்மை மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது” என்றார்.
பிரபல பாடகர் மைக்கேல் ஜக்சனின் திடீர் மரணத்தையிட்டு அவரின் நண்பர்களும் விசிறிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியிருக்கும் அதேசமயம், ஜக்சனின் சகோதரரான ஜரமின் ஜக்சன் இந்த நெருக்கடியான தருணத்தில் தமது குடும்பத்தினரின் கௌரவம், அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜக்சனின் வரலாற்றுப் புகழ்பெற்ற அல்பத்தைத் தயாரித்தவரான குயின்ஸி ஜோஜ்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்த துன்பகரமான, எதிர்பார்த்திராத செய்தியை கேள்விப்பட்டதும் நான் விரக்தியடைந்துள்ளேன். இந்த மாதிரியான இளம் வயதில் சடுதியாக ஜக்சன் எம்மத்தியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து விபரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எமது ஆன்மாக்களை கடவுள் ஒன்றிணைத்தார். 1980 களில் நாம் ஒன்று சேர்ந்து பணிகளை மேற்கொள்ள ஆண்டவனே அனுமதித்திருந்தார். இன்றுவரை நாம் ஒன்று சேர்ந்து இசையை உருவாக்கினோம். “திரில்லர், பாட்’ ஆகியன உலகின் சகல மூலை முடுக்கெங்கும் இசைக்கப்படுகின்றன. அவரின் திறமை, கருணை, தொழில்சார் சிறப்புத் தேர்ச்சி, அர்ப்பணிப்பு என்பனவற்றின் வெளிப்பாடு இதுவாகும். அவர் விட்டுச் சென்ற பங்களிப்புகள் எப்போதுமே உலகத்தவரால் உணரப்பட்டவையாக அமைந்திருக்கும். எனது சிறிய சகோதரரை இன்று நான் இழந்துவிட்டேன். எனது ஆன்மாவின் ஒரு பகுதி அவருடன் சென்றுவிட்டது.
நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு ஒரு கட்சி தலைவராக இருந்து அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் கிழக்கின் அபிவிருத்திக்காக ஒன்று பட்டு செயற்படுவோம் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் முரளி தரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளையொன்று திறந்ததன் மூலம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் எமது சகோதரர்கள் எதிர் நோக்கி வந்த சிக்கல்கள் திர்த்து வைக்கப்படும்.
நமது மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர். முதற்கட்டமாக இப்பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். கொழும்புக்கு சென்று வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டும், முகவர்களின் ஏமாற்றத்திலிருந்து தடுக்கும் பொருட்டும் இப்பணியகம் சேவையாற்றவுள்ளது என அவர் தெரிவித்தார்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஏ-9 வீதி நேற்று முதல் மக்களுடைய போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிடப் பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியில் பொலிஸ் விடுதிக்கு முன்னால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலையாளி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய பாதுகாப்பினை முன்னிட்டு வீதி மூடப்பட்டு இருந்தது.