23

23

கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !

பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது.

ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பொலிசாரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான நால்வர் கஞ்சா பொதியினை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இதன் போது, குறித்த இரு பொலிசாரும் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட 3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் !

யாழ்.போதனா வைத்தியசாலையின் 22ஆம் இலக்க மேல் மாடி விடுதியிலிருந்து கீழே வீசப்பட்ட
3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.
சட்டவிரோதமாக கருத்தரித்த யாரோ ஒருவர் இந்தக் கருவை பிரசவித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் – வேலை இழக்கவுள்ள 3000 இலங்கையர்கள் ?

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், சுமார் மூவாயிரம் ஊழியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனவும், இவற்றில் சில சேவைகளை தற்போது தமது நிறுவன ஊழியர்களே செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஹேமந்த நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

எனினும், தொலைத்தொடர்பு நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, ஒன்லைன் முறையின் மூலம் சேவைகளை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி நடந்தால் தற்போது பணியில் இருக்கும் மூவாயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் வேலையிழப்பார்கள்.
ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா வைத்தியசாலையில் அரசாங்கத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் நாற்பத்தொன்பது வீதமான பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்க தயாராக உள்ளன.

ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை !

ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்து ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.
ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா கோ கமவில் முதல் குடிலை ரணில் தரப்பே அமைத்தது.’ – விமல் வீரவன்ச

காலி முகத்திடலில்  ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார்.