June

June

நான்கு பேரும் குற்றவாளிகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் சப்ளை செய்ததாக கூறி நான்கு தமிழ் அமெரிக்கர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் – கருணா என்கிற கருணாகரன் கந்தசாமி, ராஜ பார்த்தீபன் என்கிற பார்த்தீபன் தவராசா (தம்பி சாம்ப்ராஸ், ஸ்டீபன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு), டாக்டர் மூர்த்தி, விநாயகமூர்த்தி முருகேசு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் சந்துரு என்கிற விஜயசந்தர் பத்மநாதன்.

இவர்களில் கந்தசாமி, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க கிளையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தமிழர் புனரமைப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் விடுதலைப் புலிகள் பணம் திரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வக்கீல் பென்டன் கேம்ப்பல் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட சில வாரங்களில் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நாங்கள் நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.

பல கோடி பணத்தைத் திரட்டி அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கி அனுப்ப இவர்கள் உதவியுள்ளனர் என்றார். ஐக்கிய மாவட்ட தலைமை நீதிபதி ரேமான்ட் டீரி முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் நான்கு பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக 20 ஆண்டு தண்டனை இவர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இடம்பெயர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் உள்ளனர் : அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு

idp-100609.jpgவட பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்டீன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களைத் தவிர இந்த முகாம்களில் 7 ஆயிரத்து 894 விதவைகளும் 3 ஆயிரத்து 100 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளனர்.

அதேவேளை முகாம்களில் காயமடைந்தவர்கள் 11 ஆயிரத்து 873 பேரும் ஊனமுற்றவர்கள் 3 ஆயிரத்து 968 பேரும் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களிடையே 3 ஆயிரத்து 689 பேர் அரச அதிகாரிகள் உள்ளனர் எனவும் ஹால்டீன் தெரிவித்துள்ளார். 

’டுவென்டி 20’ உலக‌கோப்பை: இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் ’டுவென்டி 20’ உலக‌கோப்பை கிரிக்கெட்‌ போட்டித்தொடரில் ‌கடைசி லீக் சுற்றின் ’சி’ பிரிவில் இலங்கை ‌வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயசூர்யா (81) தில்சன்(74) ஓட்டங்கள் எடுத்தார்.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்மன்ஸ் 4 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

வெற்றி இலக்கு 193 ஓட்டங்கள் என்ற நிலையில் அடுத்து துடுப்பாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இலங்கை அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார்.

இலங்கை வந்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டார்

bob-rae.jpgஇலங்கை வந்த கனடா எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினரான பொப் ரே உடன் திருப்பி அனுப்பப்பட்டார் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ரே விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கனடா அரசாங்கம் புலிகள் இயக்கத்தை தடை செய்த போதும் இவர் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார் எனக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. 

தமது கட்சியில் கொள்கை ரீதியாக செயல்பட முடியாதவர்கள் விலகிச் செல்வது கட்சியை பாதிக்காது-சிவனேசதுரை சந்திரகாந்தன்

10sevaneeasthurai.jpgதமது கட்சியிலிருந்து கொள்கை ரீதியாக செயல்பட முடியாதவர்கள் விலகிச் செல்வது கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

“ஒருவர் விரும்பிய கட்சியில் அங்கம் வகிப்பதும்,அக் கட்சியிலிருந்து விலகி மற்றுமொரு கட்சியில் இணைந்து கொள்வதும் ஜனநாயக உரிமை” என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கூறினார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் விரைவில் சிவில் நிர்வாகம்

images-poli.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக அப்பிரதேசங்களில் புதிதாக 21 பொலிஸ் நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.

இவற்றில் ஏழு பொலிஸ் நிலையங்கள் ஏற்கனவே மன்னார் பொலிஸ் பிரிவில் நிறுவப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளில் மேலும்  14 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தலைமையில் நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவாய், முழங்காவில்,  சிலாவத்துறை,  பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள் அடுத்தகட்டமாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்

basil.jpgமீள் குடியேற்றம் செய்யப்படுவதில் அடுத்தகட்டமாக மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள்  விரைவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார்,  முசலி பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி,  உட்கட்டமைப்பு வசதிகளுக்கென 800 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அத்துடன் நானாட்டான்,  முசலியை இணைக்கும் அருவியாறு பாலத்தின் நிர்மாணப் பணிகளை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்..

முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஏழு கிராமசேவகர் பிரிவுகளிலும் 561 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முசலி,  அரிப்பு கிராமத்திலுள்ள புனித செங்கோல் அன்னை தேவாலய முன்றலில் நடைபெற்ற வைபவத்தில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மீள்குடியேற்ற,  அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தெற்கையும், வடக்கையும் இணைக்கும் முதலாவது நகரமாக முசலி திகழ்கிறது. புத்தளம் முதல் எழுவன்குளம் வழியாக வரும் பாதையில் முதலாவதாக சந்திக்கும் பிரதான நகரமாக முசலி நகரம் அமைவது. சந்தோசத்தை கொடுக்கிறது.

முசலி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சற்று தாமதங்கள் ஏற்பட்டன. இதற்காக ஜனாதிபதி உங்கள் அனைவரிடமும் தனது கவலையை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதற்கு ஈடுசெய்யும் வகையில் மன்னார் அரச அதிபரினால் முன்வைக்கப்பட்ட முசலி பிரதேச செயலக பிரிவு அபிவிருத்தி, உட்கட்ட மைப்புக்காக மதிப்பீடு செய்யப்பட்ட 800 மில்லியன் ரூபாவையும் குறைவின்றி உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கிவிட்டார்.

இடம்பெயர்ந்தாலும், அகதிமுகாம்களில் தங்கியிருப்பதும் இன்று நேற்று நடைபெற்றதல்ல. 20, 30 வருடங்களாக மாறி மாறி மக்கள் அகதி முகாம்களில் இருக்கின்றனர். மலையக மக்களும் கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் குடிபுகுந்தனர். அவர்களும் அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். இதனை சில மலையக தலைவர் இன்று மறந்திருந்தாலும் நாம் மறந்துவிடவில்லை என பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாh

கனேடிய எம்.பி பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

bob-rae.jpgகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கைக்கு நேற்று இரவு வந்திறங்கிய சமயம் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

தமிழர் நிலை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது : சுஷ்மா

sushma.jpgஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார். ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை – கனிமொழி

kani-mholi.jpgஇலங் கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.