தமிழர் நிலை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது : சுஷ்மா

sushma.jpgஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார். ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • rony
    rony

    இவருக்கு இரத்தம் கொதிப்பது தமிழர் படும் பாட்டிலா? காதிலே பூவா?
    இவ்வளவு காலமும் இவர் எங்கே போயிருந்தார். அல்லது கோமாவா?
    இலங்கை தமிழர்களென்றால் இவர்களுக்கு 304 சீட்டு விளையட்டில் துரும்புச்சீட்டு போலல்லவா ஆகிவிட்டது.

    Reply
  • மாயா
    மாயா

    ஈழத் தமிழர் குறித்து அனைவரும் கவலைப்படுகின்றனர். புலிகளால் தமது கவலையைக் கூட வெளியிட முடியாமல் இருந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது புலிகளுக்காக பேசுவதாகிவிடும்.

    Reply
  • indiani
    indiani

    புலிகள் இவ்வளவ காலமும் செய்தத போராட்டமல்ல இதுவே பயங்கரவாதம் அதனாலேயே அது அழிந்தொழிந்தது போராட்டம் என்பது அழியாதது அது அதன் இயக்கம் தொடரும் தன்மை கொண்டது எப்போதும் போராட்ம் மாற்றங்களை அடைந்தும் மாறுபட்டும் வெற்றியை நோக்கியே நகரும்.

    பயங்கரவாதம் பயங்கரவாதத்தால் வீழ்த்தப்படும் தன்மை கொண்டது. மக்கள் போராட்டம் மக்களுடன் தொடர்ந்து செல்லும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு பாஜக ஆட்சியிலிருந்த போதெல்லாம், இவரின் இரத்தம் என்ன உறைந்தா போயிருந்தது. அப்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் பாஜக ஏதாவது ஆக்கபூர்வவமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா?? இப்போது இரத்தம் கொதித்து என்ன பயன்??

    Reply