இங்கி லாந்தில் ’டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் கடைசி லீக் சுற்றின் ’சி’ பிரிவில் இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயசூர்யா (81) தில்சன்(74) ஓட்டங்கள் எடுத்தார்.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்மன்ஸ் 4 விக்கெட்டுகள் விழ்த்தினார்.
வெற்றி இலக்கு 193 ஓட்டங்கள் என்ற நிலையில் அடுத்து துடுப்பாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இலங்கை அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார்.