March

March

இந்தியாவில் மனிதர் மலம் அள்ளும் அவலத்தை ஒழிக்க கோரி பிரிட்டனில் போராட்டம்

india.jpgஇந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும் பெரும்பாலும் பெண்கள் அடங்கலாக 13 லட்சம் பேர் இன்னும் மனித மலத்தை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனரான மீனா வர்மா குற்றஞ்சாட்டினார்.

இந்திய அரசாங்கம் இது தொடர்பான சட்டங்களை அமல்படுத்தவில்லை. இவ்வாறு மனித மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மீள்வாழ்வுக்காக உறுதிவழங்கப்பட்ட நிதியையும் அது வழங்க மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு இந்த தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

யாழ்குடாவுக்கு இன்று முதல் ஏ-9 வீதி ஊடாக உணவு – 35 லொறிகள் பயணம்

lorries.jpgயாழ் குடாநாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 24 வருடங்களின் பின்னர் ஏ-9 வீதியூடாக இன்று கொண்டு செல்லப்படுகின்றன. 350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் சுமார் 35 லொறிகள் கொழும்பு வெலிசறை களஞ்சியசாலையிலிருந்து இன்று காலை புறப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களும் உலக உணவுத் திட்டத்தினால் குடாநாட்டு மக்களுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களும் மேற்படி லொறிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெலிசறை களஞ்சியசாலையில் உத்தியோகபூர்வமாக இன்று உணவு லொறிகளை வழியனுப்பி வைக்கவுள்ளார். உணவு பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கென புதிதாக மேலும் 12 லொறிகளை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்துள்ளார்.

வெலிசறை களஞ்சியசாலையில் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் லொறிகளில் ஏற்றப்படும் பொருட்கள் யாழ். கைதடி நாவற்குழி யாழ். அரச அதிபரின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்தே பகிர்ந்தளிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.  உணவுப் பொருட்களுடன் செல்லும் லொறிகள் அங்கிருந்து வரும்போது யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாரத்திற்கு 100 லொறிகள் வீதம் ஏ-9 பாதையூடாக ஆனுப்புவதற்கும் உத்தே சிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் ஏ-9 பாதையூடாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களையும் கொண்டு செல்வதற்கான வசதிகளும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

army-help.jpg(நேற்றைய தொடர்ச்சி)

266. டி. சரஸ்வதி, மாத்தளன், (வயது 30),

267. டி. குயிலினி, (வயது 07),

268. பி. டயஸ், மாத்தளன், (வயது 31),

269. பி. கலைவேந்தன், (வயது 04),

270. கே. மணியன், கிளிநொச்சி, (வயது 52),

271. ஏ. மங்கையற்கரசி, அடம்பன், (வயது 67),

272. கே. மாணிக்கம், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 66),

273. எஸ். ராமச்சந்திரன், யாழ்நகர், (வயது 62),

274. ராசையா, கிளிநொச்சி, (வயது 74),

275. ஏ.சின்னத்துரை, கிளிநொச்சி, (வயது 75),

276. டி.தக்ஷன், புதுக்குடியிருப்பு, (வயது 25),

277. துலியா, மாத்தளன், (வயது 07),

278. கே.ரஞ்சிதமலர், மாங்குளம், (வயது 64),

279. கே. கனகரத்னம், மாத்தளன், (வயது 54),

280. கே. கைலாயபிள்ளை, பூநகரி, (வயது 61),

281. கே. தனலட்சுமி, மாங்குளம், (வயது 50),

282. ஜே. இந்திரராணி, புதுக்குடியிருப்பு, (வயது 65),

283. கே. கௌதினி, முள்ளியவளை, (வயது 33),

284. கே. நந்துஷன், முள்ளியவளை, (வயது 1),

285. எஸ். கோபிராஜ், புதுக்குடியிருப்பு, (வயது 07),

286. ஜே. ஜயந்த, புதுக்குடியிருப்பு, (வயது 36),

287. எம். குகன், முல்லைத்தீவு, (வயது 30),

288. எஸ். சிவநேசன், கிளிநொச்சி, (வயது 43),

289. பி. கண்மணிப்பிள்ளை, மல்லாவி, (வயது 68),

290. பி. கேதுஷன், மல்லாவி, (வயது 07),

291. கே. புஷ்பராணி, மல்லாவி, (வயது 74),

292. எஸ். நாகரட்ணம், பொக்கணை, (வயது 86),

293. ஜே. டயனா கொலின், இரணைப்பாலை, (வயது 22),

294. வை.சிந்துஜா, இரணைப்பாலை, (வயது 09 மாதம்)

295. எஸ். சுந்தரம், பரந்தன், (வயது 72),

296. கே. ரவி, மலையமடு, (வயது 15),

297. எஸ்.பரமலிங்கம், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 59),

298. எஸ். இராசம்மா, உருத்திரபுரம், (வயது 68),

299. எம். மாணிக்கம், பொக்கணை, (வயது 68),

300. எஸ். சிதம்பரம், பொக்கணை, (வயது 75),

301. ஏ. குஞ்சியம்மா, கிளிநொச்சி, (வயது 58),

302. யு.கருப்பசாமி, முரசுமோட்டை, (வயது 75),

303. எஸ். ராசமணி, முரசுமோட்டை, (வயது 69),

304. பி. திருஞானசோதி, புளியங்குளம், (வயது 52),

305. ஆர்.செல்லையா, தர்மபுரம், (வயது 68),

306. ஆர். விக்னராஜா, முள்ளியவளை, (வயது 69),

307. என். செந்தூரன், முள்ளியவளை, (வயது 41),

308. எல்.சிவனேஸ்வரியம்மா, காங்கேசன்துறை, (வயது 63),

309. ஏ. லோகேஸ்வரன், காங்கேசன்துறை, (வயது 67),

310. கே. அன்னலட்சுமி, யாழ்ப்பாணம், (வயது 72),

311. எம்.கந்தசாமி, காங்கேசன்துறை, (வயது 76),

312. ஆர். சுகந்தினி, அடம்பன், (வயது 27),

313. ஆர்.ரேகா, அடம்பன், (வயது 08),

314. ஆர். பிரதீபா, அடம்பன், (வயது 09),

315. ஆர். பானுஷன், அடம்பன், (வயது 04),

316. கே.தங்கராசா, பூநகரி, (வயது 54),

317.எஸ். கனகசபை, மல்லாவி, (வயது 62),

318. ஆர். தணிகாசலம், யாழ்நகர், (வயது 70),

319. எம். மாரியப்பன், ஹொரண, (வயது 60),

320. கே. வேலாயுபிள்ளை, முல்லைத்தீவு, (வயது 60),

321. டி. சிரோன்மணி, பேசாலை, (வயது 23),

322. டி. சந்தோஷ், பேசாலை, (வயது 02),

323. கே. பூமாதேவி, முல்லைத்தீவு, (வயது 39),

324. மேனகாந்த், முல்லைத்தீவு, (வயது 11),

325. எஸ். புஷ்பராணி, வவுனியா, நெடுங்கேணி,

326. எஸ். கலையரசன், வவுனியா,

327. எஸ். கலைமாது, வவுனியா, நெடுங்கேணி, (வயது 06),

328. எஸ். யோகம்மா, இராமநாதபுரம், (வயது 60),

329. சி. சாமுவல், அடம்பன், (வயது 78),

330. ஏ.சிறிஸ்கந்தராஜா, இராமநாதபுரம், (வயது 69),

331. எஸ். வேலாயுதம், நீர்வேலி, (வயது 60),

332. எஎஸ். சபரிமுத்து, வட்டக்கச்சி, (வயது 77),

333. எஸ்.ராஜதுரை, ஸ்கந்தபுரம், (வயது 64),

334. எஸ்.ராஜா, உருத்திரபுரம், (வயது 73),

335. எஸ். சண்முகம், சிவநகர், (வயது 79),

336. எஸ். மல்லிகாதேவி, சிவநகர், (வயது 71),

337. எஸ். புவனேந்திரன், வட்டக்கச்சி, (வயது 38),

338. பி. ஆரிகா, வட்டக்கச்சி, (வயது 02),

339. பி. லோகிகா, வட்டக்கச்சி, (வயது 04),

340. பி. பாமினி, கிளிநொச்சி, (வயது 36),

341. ரி. ஷகிலா, பொக்கணை, (வயது 24),

342. ஆர். சரஸ்வதி, பொக்கணை, (வயது 62),

343. பேபி ஷகிலா, (ஒரு நாள் குழந்தை),

344. ரி.சுகந்தினி, முள்ளியவளை, (வயது 26),

345. ரி. திருத்திகா, குமுழமுனை, (வயது 03),

346. ரி. திலக்ஷன், குமுழமுனை, (வயது 04),

347. ஆர். தமிழ்வேந்தினி, மயலிட்டி, (வயது 02),

348. ஆர்.ரஜீவன், மயிலிட்டி, (வயது 02),

349. ஆர். சந்திரரூபகலா, கிளிநொச்சி, (வயது 19),

350. ஆர். ராமானுஜம், கிளிநொச்சி, (வயது 58),

351. எஸ். சபரிமுத்து, மடு, (வயது 62),

352. கே. புவனேஸ்வரி, குமுழமுனை, (வயது 60),

353. வை. ஜெயரூபன், மல்லாவி, (வயது 30),

354. ஆர்.ஜெயகலா, பளை, (வயது 30),

355. ஆர். முகிலன், பளை, (வயது 2 மாதம்),

356. ஆர்.ராகுலன், பளை, (வயது 06),

357. ஆர்.கோகுலன், பளை, (வயது 08),

358. எம். நீலகாந்தி, கிளிநொச்சி, (வது 54),

359. ஜெயதர்ஷினி, மல்லாவி, (வயது 28),

360. யதுர்ஷிகா, மல்லாவி, (வயது 02),

361. ஏ.சிவானந்தரூபி, பொக்கணை (வயது 36),

362. எஸ்.லோகிதன், பொக்கணை (வயது 01),

363. கே.செந்தமிழ்ச் செல்வன், பொக்கணை (வயது 34),

364. எம்.ரவீந்திரன், பளை (வயது 31),

365. ராமலிங்கம், வட்டக்கச்சி (வயது 76),

366. ரி.பூமணி, யாழ்நகர் (வயது 90).

367. பரமேஸ்வரி, உடையார்கட்டு (வயது 75),

368. கே.யது, உடையார்கட்டு, (வயது 4)

369. கே.சுகந்தினி, மாத்தளன் (வயது 27),

370. கே.கோவலன், மாத்தளன், (வயது 5),

371. கே.தமிழ்ச்செல்வி, மாத்தளன் (வயது 2),

372. எஸ்.கோணேஸ்வரன், கைவேலி (வயது 35),

373. கே.ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 62),

374. கோபாலபிள்ளை, உதயநகர் (வயது 70),

375. ஏ.தர்மன், பூநகரி (வயது 63),

376. பி.திலகவதி, கண்டாவளை (வயது 66),

377. கே.தோமஸ், சுண்ணவெளி (வயது 60),

378. எஸ்.அருணாகலன், வடமராட்சி, (வயது 80),

379. வி.பாக்கியம், அரியவலி (வயது 73),

380. எம்.வேலுவிநாயகம், அரியவலி (வயது 77),

381. எம்.சின்னப்பிள்ளை, வெற்றிலைக்கேணி (வயது 72),

382. கே.ஈஸ்வரன், கண்டாவளை (வயது 45),

383. எஸ்.சாவித்திரி, உடையார்கட்டு (வயது 66),

384. ஏ.தேவகுமார், யாழ்நகர் (வயது 49),

385. பி.கணபதிப்பிள்ளை, குமுழமுனை (வயது 76),

386. ரி.மயில்வாகனம், பூநகரி (வயது 70),

387. வண.எஸ்.ஏ.எல்.பிகாராடோ, மன்னார் (வயது 32),

388. ஆர்.வள்ளியம்மா, மாத்தளன் (வயது 73),

389. வண.எஸ்.சத்தியராஜா, மன்னார் (வயது 34),

390. வண.ஏ.ஆரோக்கியம், மன்னார் (வயது 32),

391. வண.பீற்றர் அருள்நாதன், மன்னார் (வயது 61),

392. எஸ்.ஆறுமுகம், உடுப்பிட்டி (வயது 74),

393. ஜி.தங்கப்பதுமை, புதுக்குடியிருப்பு (வயது 47),

394. வி.சண்முகம், பொக்கணை (வயது 73),

395. ரி.தேவராணி, புதுக்குடியிருப்பு (வயது 52),

396. என்.துரைசிங்கம், புதுக்குடியிருப்பு (வயது 62),

397. உயிரிழந்தவர், பெயர் தரப்படவில்லை.

398. பி.முரளி, மாத்தளன் (வயது 32),

399. எம்.திலக்ஷணா, மாத்தளன் (வயது 02),

400. ஜுட்நிஷாந்தன், மாத்தளன் (வயது 12),

401. ஜுட்ராஜினி, மாத்தளன் (வயது 40),

402. என்.சின்னம்மா, மளிகைக்காடு (வயது 77),

403.எம்.திலுக்ஷி, யாழ்நகர் (வயது 04),

404. எம்.சசியா, யாழ்ப்பாணம் (வயது 28),

405. எஸ்.மீனாட்சி, கிளிநொச்சி (வயது 76),

406. எஸ்.திருப்பதி, யாழ்ப்பாணம் (வயது 65).
 

குடாநாட்டில் 93,832 பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் 27 ஆயிரத்து 601 குடும்பங்களைச் சேர்ந்த 93 ஆயிரத்து 832 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இவர்களில் 21 ஆயிரத்து 591 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 672 பேர் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

6 ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 205 பேர் மேற்படி திகதிக்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு மேலதிகமாக படையினரின் பயன்பாட்டுக்கென மேலும் பல பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இந்தக் குடும்பங்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றார்கள்.

இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கடகோள் அனர்த்தத்தால் பருத்தித்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 773 சிவிலியன்கள் வருகை

Wanni_Warபுலிகளின் பிடியிலியிலிருந்து தப்பி 773 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக களமுனையிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்குள்ளேயே மேற்படி தொகையினர் அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புதுமாத்தளனிலிருந்து 112 சிவிலியன்கள் விஸ்வமடு நோக்கி தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வந்த மேற்படி சிவிலியன்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக 60 பேர் பலத்த சூட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயங்களுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இவர்கள் படையினரைத் தேடி வந்துள்ளனர். படையினர் உடனடியாக வைத்தியர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கிய பின்னர் காயமடைந்த 60 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விஸ்வமடு நோக்கி நேற்று வந்த 112 சிவிலியன்களும் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டவர்களென்றும் மோதல்கள் காரணமாகவே முல்லைத்தீவு நோக்கி சென்றி ருந்ததாகவும் விஸ்வமடுவிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் 661 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர். மேற்படி சிவிலியன்களுள் 621 பேர் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள படையினரிடம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஏனைய 40 பேரும் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை வந்தடைந்திருப்பதாகவும் பிரிகேடியர் கூறினார். முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருப்போர் வவுனியாவிலுள்ள நலன்புரி கிராமங்களுக்கும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளோர் அங்கிருக்கும் நலன்புரி கிராமங்களிலும் குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் பல்வேறு முனைகளினூடாகவும் முன்னேறி வரும் படையினர் புலிகளை ஒழிப்பதற்காக கடும் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக கூறிய பிரிகேடியர் நேற்று வரை 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

3 மாதங்களின் பின் காலநிலையில் மாற்றம்

climate.jpgஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதால் கடும் காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளது.

இக்காலப் பகுதியில் மின்னலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ், பதாஹ் இணக்கப்பாடு: பலஸ்தீனப் பிரதமர் பதவி விலக சம்மதம்

w-n.jpgபலஸ்தீன் ஜனாதிபதி சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார். மார்ச் மாத இறுதியில் சலாம் பயாத் ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் ஹமாஸ¤ம் பதாவும் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிபெற்றதையடுத்து பலஸ்தீனப் பிரதமர் பதவியைத் துறக்க முன்வந்தார். காஸாவையும், பலஸ்தீனையும் மீண்டும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலும் பிரதமர் பதவி காஸாவை ஆளும் ஹமாஸ¤க்குச் செல்லவுள்ளது. காஸாவை புனரமைக்க வழங்கப்பட்ட உதவிகள் ஹமாஸிடம் செல்வதை உலக நாடுகள் விரும்பவில்லை.

மேற்குக் கரையை ஆளும் பதாஹ் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸிடம் நிதிகள் செல்வதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறான நிலையில் ஹமாஸ், பதாஹ் அமைப் பிடையே இணக்கப்பாடுகள் உண்டானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

அதேவேளை ஐக்கியப்பட்ட பலஸ்தீன் மீண்டும் உருவானால் தொடர்ந்தும் இஸ்ரேலுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.அமெரிக்காவும் ஹமாஸ், பதாஹ்விடையே ஏற்பட்ட ஒற்றுமையை வரவேற்றுள்ளதுடன் மத்தியகிழக்கு பேச்சு வார்த்தை தொடர்வதை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனியாகப் பிரிந்துசென்ற ஹமாஸ் தடையாகச் செயற்பட்டது. தற்போது இது நீங்கும் எனக் கருதப்படுகிறது.

ரீ.எம்.வி.பி. ஆயுதப் பிரிவில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்வதற்கும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரி வித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வ ளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுயதொழில் ஆரம்பிக்க வழிகாட்டவும் கட்சி தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்பிரிவில் இதுவரைக்காலமும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் கூறினார்.

பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் சட்ட திட்டங்கள் – அமைச்சர் சுமேதா

sumeda-jayasena.jpgபெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் பல்வேறு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை இருப்பதே தெரியாது. சில நீதிபதிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட இவ்வாறான சட்டங்கள் இருப்பதனை அறிந்து வைத்திருக்கவில்லை. சட்டங்களின் அடிப்படையில் கணவனால் கூட மனைவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்த முடியாதென பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேன தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:-

பெண்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எமது சமுதாயத்தின் எண்ணத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் நம் நாட்டுப் பெண்களை சக்திமிக்கவர்களாகத் தோற்றுவிக்க முடியும்.

ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகளின்படி பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தவிர ஏனைய பாலியல் துஷ்பிரயோகங்கள் பேரூந்துகளிலேயே இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்கள் இதனைத் தவிர்ப்பதற்காக மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களது நலன்புரி செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் சுமேத ஜி. ஜயசேனவின் 20 வருட கால அரசியல் சேவையைப் பாராட்டி நாட்டின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அவரை விருது வழங்கி கெளரவித்தார். நேற்றைய நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பெண்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆலோசனை குழு – மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

ratha-kirishnan.jpgமலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதற்கென ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தப் போவதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இ. தொ. கா உப தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு மத்திய மாகாண சபையில், கைத்தொழில், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் மகளிர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி தமிழ்க் கல்வி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி- பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடமைக ளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மாகாண அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கண்டி – ரோயல் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இ. தொ. கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் நான்காவது தடவையாக அமைச்சராகியிருக்கும் இராதாகிருஷ்ணன் இங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதற்தடவையாக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இ. தொ. கா. என்ன சொல்கிறதோ அதனைக் கட்டாயம் நிறைவேற்றித் தீருவேன்.

இந்திய உதவி தூதுவரிடம் சென்று உதவிகள் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 188 இந்து அறநெறிப் பாடசாலைகளையும் ஒரு கொள்கையின் கீழ் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வோம். ரம்பொடவிலுள்ள தொண்டமான் கலாசார நிலையத்தினை கவின்கலை நிறுவனமாக மாற்றி, நடனம், சங்கீதம், இசைக் கருவிகளுக்கான பாடநெறிகள் ஆரம்பிப்போம்.

தேசிய பாடசாலை என்பதில் நாம் உடன்பாடில்லை. தேசிய பாடசாலைகளை கொழும்பே நிர்வகிக்கின்றது. மாகாண அமைச்சு நிர்வகிக்க முடியாது. இன்று அதிகார பரவலாக்கலின் கீழ் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.