பலஸ்தீன் ஜனாதிபதி சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார். மார்ச் மாத இறுதியில் சலாம் பயாத் ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எகிப்தில் ஹமாஸ¤ம் பதாவும் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிபெற்றதையடுத்து பலஸ்தீனப் பிரதமர் பதவியைத் துறக்க முன்வந்தார். காஸாவையும், பலஸ்தீனையும் மீண்டும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலும் பிரதமர் பதவி காஸாவை ஆளும் ஹமாஸ¤க்குச் செல்லவுள்ளது. காஸாவை புனரமைக்க வழங்கப்பட்ட உதவிகள் ஹமாஸிடம் செல்வதை உலக நாடுகள் விரும்பவில்லை.
மேற்குக் கரையை ஆளும் பதாஹ் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸிடம் நிதிகள் செல்வதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறான நிலையில் ஹமாஸ், பதாஹ் அமைப் பிடையே இணக்கப்பாடுகள் உண்டானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
அதேவேளை ஐக்கியப்பட்ட பலஸ்தீன் மீண்டும் உருவானால் தொடர்ந்தும் இஸ்ரேலுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.அமெரிக்காவும் ஹமாஸ், பதாஹ்விடையே ஏற்பட்ட ஒற்றுமையை வரவேற்றுள்ளதுடன் மத்தியகிழக்கு பேச்சு வார்த்தை தொடர்வதை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனியாகப் பிரிந்துசென்ற ஹமாஸ் தடையாகச் செயற்பட்டது. தற்போது இது நீங்கும் எனக் கருதப்படுகிறது.