இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதால் கடும் காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளது.
இக்காலப் பகுதியில் மின்னலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.