இலங் கைத் தமிழரின் நிவாரண நிதிக்கு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 2 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாவினைச் சேகரித்துள்ளது. இந்த நிதியினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டலக் குழுத் தலைவர் பிரான்சுவா ஸ்டாமிடம் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 9 ஆம் திகதி தமிழ் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத மேடையில் ஈழத்தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட உண்டியல் வைக்கப்பட்டது. ஜெயலலிதா தன் சொந்த பணத்தில் இருந்து 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அத்தோடு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்தார். வெளி மாவட்டங்களில் உண்டியல்களில் வசூலான தொகை சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து வங்கி அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இந்த உண்டியல்கள் மூலம் 1 கோடியோ 11 இலட்சத்து 89 ஆயிரத்து 391 ரூபாய் 50 சதம் வசூலாகி இருந்தது.
கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ. 1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ. 2 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரத்து 391.50 ரூபாவுக்கு வங்கியில் டி.டி. எடுக்கப்பட்டது. இந்த நிதியை சங்கத்தின் மண்டல குழுத் தலைவர் பிரான் சுவா ஸ்டாமிடம் நிதியை ஜெயலலிதா வழங்கினார்.