27

27

கன்னி கழியாத என்டோஸ்கொபி – டொக்டர் சத்தியமூர்த்தி அம்பியா..? அந்நியனா..? – தொடரும் குற்றச்சாட்டுக்கள்..

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில் ; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார்.

பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார் . அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார் , மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன் . பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017 இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் , டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத் ; திருந்தார் .

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

90 சதவீதமான மருந்துகளை இலங்கையில் உற்பத்தி செய்ய திட்டம்!

நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் பயன்படுத்தப்படும் 200இற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொகை மொத்த மருந்து தேவையில் 25 சதவீதமாகும்.

 

இதற்கிடையில் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு முதல் முழுமையாக மாற்றமடையும் இலங்கையின் கல்வி முறை..!

2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் படி, ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிய சீர்திருத்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் படிப்படியாக கட்டாயமாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, புதிய சீர்திருத்தத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் போட்டியை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களும் 9ல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவு !

வடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் சில பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவை மிகவும் வெற்றிகரமாக அகற்றப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

 

அத்துடன் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வாக போதியளவு விநியோகத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 05 குடிநீர் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் 02 திட்டங்கள் அடுத்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை!

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நேற்று வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.

 

அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.