23

23

பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை – தாயின் முறைப்பாட்டின் படி தந்தை கைது !

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.

 

பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.

 

மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, ​​கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பின்னர், தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தேர்தலை பிற்போடும் ரணிலின் திட்டமே 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் – விஜித ஹேரத்

“22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது,

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை.

 

தேர்தலை பிற்போடும் நடவடிக்கைகளில் ஒன்றாக ரணில் விக்ரமசிங்க திடீரென 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சி செய்கின்றார்.

பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களை பொருட்படுத்தவில்லை.

 

ஜீவன் தொண்டமானை அருகில் வைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றார். உள்ளது இன்று வரை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டும் அது கிடைப்பதற்கான அறிகுறியே இல்லை என, மீண்டும் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

 

தோட்டக் கம்பனிகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கி சம்பளத்தை அதிகரிக்கவில்லை என தோட்டக் கம்பனிகளை குற்றம் சாட்டுவதையே அரசாங்கம் செய்து வருகின்றது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர்களிடையே குறைவடையும் நோயெதிர்ப்புச் சக்தி – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

உலகளாவிய ரீதியில் உள்ள சிறார்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதன்படி, உலகளாவிய ரீதியில் சிறுவர் நோய்த்தடுப்பு பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு தொற்றுநோக்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 2.7 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2022 ஆம் ஆண்டில் தடுப்பூசிக்கூட செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 13.9 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

 

இதனால் அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் அதேபோன்று, 31 நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லை எனவும், தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.