14

14

நிவாரண கிராமங்களில் 27 ஜோடிகளுக்கு பதிவுத் திருமணம்

வன்னி யிலிருந்த இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளாமலுள்ள 27 ஜோடிகளுக்கு பதிவும் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்து வரும் போதே குழந்தைகளுடன் வந்த இவர்களுக்கு இலவசமாக பதிவுத் திருமணங்களை கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இயங்கும் “நிதியை சமமாக அணுகும் கருத்திட்டம்” என்ற அமைப்பு செய்து வைத்தது.

அரசியலமைப்பு, தேசிய நல்லிணக்க அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல அமைச்சு என்பவற்றின் உதவியுடன் மேற்படி 27 ஜோடிக்கும் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜயரட்ணம் கதிர்காமர் கிராமத்திற்குச் சென்று திருமறை பதிவுகள் செய்ததுடன் அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் பதிவு இன்றி திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஜோடிகளுக்கும் பதிவுத் திருமணத்தை செய்துவைக்க மேற்படி கருத் திட்டத்தினர் நடவடிக்கை எடுத்துக் வருகின்றனர்.

ஏ-9 வீதியூடாக வியாழன் முதல் தபால் சேவை!

141009post-box.jpgயாழ் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்கும் ஏ-9 பாதையூடாக தபால் சேவை நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. தற்போது ஏ-9 பாதையூடாக பயணிகள் போக்குவரத்து ஆரம்மபிக்கப்படவுள்ளது. தற்போது  பயணிகள் கப்பல் சேவை ஒழுங்காக நடைபெறாததால் தபால் சேவையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைத் தவிர்ப்பதற்காகவே பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தினமும் தபால் பொதிகளை எடுத்தச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகத் தயார் என பாகிஸ்தான் கேப்டன் அறிவிப்பு

141009younuskhan226.jpgசமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளின் முடிவுகளை முன்கூட் டியே நிர்ணயிப்பதற்கு பணத்தை பெற்றுக்கொண்டு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பாகிஸ்தசன் கிரிக்கெட் அணியின் தலைவர் யூனிஸ் கான் பதவி விலக முன்வந்துள்ளார்.

தம் மீதும் தமது அணியின் மீதும் எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த பாகிஸ்தானின் நாடாளுமன்ற குழு, இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த பிறகும் யூனுஸ்கான் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

அவரது ராஜினாமவை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரி யம் ஏற்குமா இல்லையா என்பது உடனடியாக தெரியவில்லை.

பிரான்சில் 22 இலங்கையர்கள் மீது வழக்கு விசாரணை

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 22 தமிழர்கள் மீது திங்கட்கிழமை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.  பிரான்சில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5 மில்லியன் யூரோ பணத்தை இந்த 22 பேரும் மிரட்டிப் பெற்றனர் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த 22 பேரில் பெரும்பாலானவர்கள் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். தீவிரவாதத்திற்கு ஆதரவாகக் குற்ற சதிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. என ஏ.எஃப்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது

வடக்கு – கிழக்கில் ஆயூதங்கள் மீட்பு!

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் தொகையான ஆயதங்களையம் வெடிப்பொருட்களையும் மீட்டுள்ளனர்.

வவுனியாää முல்லைத்தீவு,  மன்னார் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில்;  பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல்களில் இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயதங்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 21 ஆர்.பி.ஜி. ரக குண்டுகள்ää 2 ரி 81 ரக துப்பாக்கிகள்ää ரி-51 ரக துப்பாக்கிää 40 மி.மி. ரக துப்பாக்கிää 13 ரி- 56 ரக துப்பாக்கி மெகசின்கள்ää 7 1ஃ2 கிலோ எடையுள்ள 5 கிளைமோர் குண்டுகள்ää 5 கிலோ எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகள்ää ஒரு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுää இரு தற்கொலை அங்கிகள்ää 1500 மி.மி. 7.62 ரக ரவைகள்ää 12 கைக்குண்டுகள்ää விமானங்களை தாக்கும் 50 குண்டுகள்ää 6850 ரவைகள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவின் மற்றொரு பிரதேசத்தில் வைத்து 2 தேர்மோ பெரிக் ரக ஆயுதங்கள்ää 4 ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள்ää 8 ஆர்.பி.ஜி. குண்டுகள்ää வேறு வகையான 19 குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இதேவேளை உப்புவேலி பகுதியில் 6 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர நிகவெரட்டிய கொடவெஹர பகுதியில் துப்பாக்கியொன்றுடன் இருவர் கைதானதாகவும் பொலிஸார் கூறினர்.

அடுத்த தேர்தல் பற்றிய அறிவிப்பு நவம்பர் 15இல்

000lakshman_yapa_abeywardena.jpgஅடுத்து வருவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பதை நவம்பர் 15ல் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்படுமென எழும் பிரசாரங்கள் வெறும் புரளியெனத் தெரிவித்த அமைச்சர்; ஏப்ரலுக்குள் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

அதேவேளை புதிய அரசாங்கத்துக்கு வரவு செலவுத் திட்டத்துக்கான வாய்ப்பினை வழங்கும் வகையிலேயே அரசாங்கம் இவ்வருடத்தில் வரவு செலவு திட்டத்தினைத் தவிர்த்து இடைக்கால கணக்கறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர்; இடைக்கால கணக்கறிக்கை என்பது புதியதொன்றல்ல எனவும் வரவு செவுத் திட்டம் தாமதமாகும் பட்சத்தில் இவ்வாறான இடைக்கால கணக்கறிக்கை முன்வைப்பது வழக்கம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

அரசாங்கத்தின் பொருளாதார நிலை உட்பட சகலதும் சிறப்பாகவுள்ளதுடன் குழப்பகரமான சூழல் எதுவுமில்லாதபோது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை ஏன் சமர்ப்பிக்கவில்லை?

என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். அரசு பலவீனமடைந்துள்ளதாகவும் பல பிரசாரங்கள் எழுகின்றன. எதிர்வரும் மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் புதிய அரசு, புதிய பாராளுமன்றம் அமைச்சரவை மாற்றங்கள் என பல மாறுதல்கள் ஏற்படவுள்ளன.

அதனைக் கருத்திற்கொண்டே இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 6700 மில்லியன் ரூபா தேவைப்படு கிறது.

இதனால் அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் இதற்கான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மரதன் கடவள நால்வருக்கு மரண தண்டனை

மரதன் கடவளப் பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிவான் மேனகா விஜேசுந்தர கடந்த திங்களன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மரதன்கடவளையைச் சேர்ந்த பிரேமரத்ன கலப்பத்தி, பீ. எச். சுகதபால, டப்ளியூ. திலகசிரி சேனாரத்ன எட்வட் ஆகிய நால்வருக்குமே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த ஆர். எம். ஜினதாஸ என்பவராவார்.