பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் தொகையான ஆயதங்களையம் வெடிப்பொருட்களையும் மீட்டுள்ளனர்.
வவுனியாää முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில்; பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல்களில் இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயதங்கள் எனவும் பொலிஸார் கூறினர்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 21 ஆர்.பி.ஜி. ரக குண்டுகள்ää 2 ரி 81 ரக துப்பாக்கிகள்ää ரி-51 ரக துப்பாக்கிää 40 மி.மி. ரக துப்பாக்கிää 13 ரி- 56 ரக துப்பாக்கி மெகசின்கள்ää 7 1ஃ2 கிலோ எடையுள்ள 5 கிளைமோர் குண்டுகள்ää 5 கிலோ எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகள்ää ஒரு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுää இரு தற்கொலை அங்கிகள்ää 1500 மி.மி. 7.62 ரக ரவைகள்ää 12 கைக்குண்டுகள்ää விமானங்களை தாக்கும் 50 குண்டுகள்ää 6850 ரவைகள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவின் மற்றொரு பிரதேசத்தில் வைத்து 2 தேர்மோ பெரிக் ரக ஆயுதங்கள்ää 4 ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள்ää 8 ஆர்.பி.ஜி. குண்டுகள்ää வேறு வகையான 19 குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இதேவேளை உப்புவேலி பகுதியில் 6 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர நிகவெரட்டிய கொடவெஹர பகுதியில் துப்பாக்கியொன்றுடன் இருவர் கைதானதாகவும் பொலிஸார் கூறினர்.