பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 22 தமிழர்கள் மீது திங்கட்கிழமை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரான்சில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5 மில்லியன் யூரோ பணத்தை இந்த 22 பேரும் மிரட்டிப் பெற்றனர் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த 22 பேரில் பெரும்பாலானவர்கள் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். தீவிரவாதத்திற்கு ஆதரவாகக் குற்ற சதிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. என ஏ.எஃப்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது