சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளின் முடிவுகளை முன்கூட் டியே நிர்ணயிப்பதற்கு பணத்தை பெற்றுக்கொண்டு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பாகிஸ்தசன் கிரிக்கெட் அணியின் தலைவர் யூனிஸ் கான் பதவி விலக முன்வந்துள்ளார்.
தம் மீதும் தமது அணியின் மீதும் எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த பாகிஸ்தானின் நாடாளுமன்ற குழு, இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த பிறகும் யூனுஸ்கான் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
அவரது ராஜினாமவை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரி யம் ஏற்குமா இல்லையா என்பது உடனடியாக தெரியவில்லை.