யாழ் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்கும் ஏ-9 பாதையூடாக தபால் சேவை நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. தற்போது ஏ-9 பாதையூடாக பயணிகள் போக்குவரத்து ஆரம்மபிக்கப்படவுள்ளது. தற்போது பயணிகள் கப்பல் சேவை ஒழுங்காக நடைபெறாததால் தபால் சேவையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தவிர்ப்பதற்காகவே பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தினமும் தபால் பொதிகளை எடுத்தச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.