13

13

வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

12vaiko000.jpgவவுனி யாவில் இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது, புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தென்காசியில் நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக  செயல் வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகையில்,
 
இலங்கையில் இராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைப் பிரச்னையில், திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபாலரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர்.

அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், தமிழக முதல்வர் கருணாநிதி என வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.  வவுனியாவில் இலங்கை இராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை எரியச் செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, இராணுவம் கூறுவதாக வைகோ தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய தமிழருக்கு சிறைத் தண்டனை

11shanthan.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிக்க உதவும் உபகரணங்களை வழங்கியதான குற்றசாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

தெற்கு லண்டனில் வசிக்கும் சொத்து மிதிப்பீட்டாளரான அருணாச்சலம் கிறிஷாந்தகுமார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வழங்குவதை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார் என்பதான வழக்கில் குற்றவாளி என்று தீர்பபளிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் முன்னெடுத்துவந்த மனித நேயப் பணிகளை பாராட்டிய நீதிபதி அவர் ஒரு நாகரீகமான மனிதர் என்றும், தான் கொண்டிருந்த ஒரு கொள்கைக்கான காரணத்தினால் அவர் சட்டதை மீறி நடந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மீட்டல் வகுப்புக்களை ஒரே இடத்தில் நடத்த ஏதுவாக 50 கூடாரங்கள் – நிவாரணக் கிராமங்களில் க.பொ.த. (உ/த) பரீட்சை

2009 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சுமார் 1500 மாணவ, மாணவிகளு க்கும் துரித மீட்டல் வகுப் புகளை ஒரே இடத்தில் நடத்துவதற்கு ஏதுவாக 50 கூடாரங்கள் அமைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ் வர்ல்ட் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்க ளுக்கு பொறுப்பான இரா ணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி எதிர் வரும் திங்கட்கிழமை மேற் படி 50 கூடாரங்களையும் திறந்துவைப்பதுடன் துரித மீட்டல் வகுப்புகளையும் ஆரம்பித்து வைப்பார் என திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

திங்களன்று இதற்காக வைபவமொன்றும் நடை பெறவுள்ளது. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு துரித மீட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான கூடாரங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதாக மேஜர் சந்திரசிறி உறுதியளித்ததையடுத்து நேற்று முதல் கூடாரங்களை அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகின.

வவுனியாவில் கதிர்காமர் ஆனந்தகுமார சுவாமி, இராமநாதன், அருணாசலம் நிவாரணக் கிராமங்கள் உட்பட 8 வலயங்களில் தங்கியுள்ள இம்மாணவர்களை கதிர் காமர் நிவாரணக் கிராமத்திலேயே துரித மீட்டல் வகுப்புகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, திருகோணமலை மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி வாண்மையாளர்களின் உதவியுடன் இவர்களுக்கு துரிதமீட்டல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

முசலியில் மீள்குடியேற்றப்பட்ட மீனவருக்கு விசேட அடையாள அட்டைகள் – 39 நீர்த்தாங்கிகளை வழங்கவும் ஏற்பாடு

fishing.jpgமன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவினுள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மீன வர்களுக்கு விசேட அடை யாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன. அத்துடன் இப் பகுதி மக்களுக்கு உடனடி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 39 நீர்த் தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளதாக முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வதன் தெரிவித்தார்.

முசலி கிராமப் பகுதியி லுள்ள குடிநீர்க் கிணறுகளி லிருந்து நீரை பெளசர்கள் மூலம் கொண்டுவந்து நீர்த் தாங்கிகளை

நிரப்புவதாகவும் குறிப்பிட்ட அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை அரிப்பு மேற்குப்பகுதியிலுள்ள புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மீளக்குடியேறிய மக்களுக்கும் மீனவர்களுக்கும் இப்பகுதி கடற்படையினர் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் கூறிய பிரதேச செயலாளர் கடற்படை கப்டன், ஜயதிலக்க, லெப்டினன் தேசப்பிரிய ஆகியோர் பெரிதும் உதவுவதாக குறிப்பிட்டார்.

வங்காலை பகுதியில் தற்போது தரித்து வைக்கப்பட்டுள்ள தமது மீன்பிடி வள்ளங்களை முசலி பகுதிக்கு எடுத்து வரவும் கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார். நேற்றுக்காலை வரை அரிப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் வரையில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முசலி பிரதேச செயலகப் பிரிவின் மின் இணைப்புக்கான திருத்த வேலைகளை இலங்கை மின்சார சபை நேற்று முதல் ஆரம்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்

கிராமிய மின் விஸ்தரிப்புத் திட்டம் – ஈரான் 106 மில். டொலர் கடன் உதவி

கிராமிய மின் விநியோக திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கென ஈரான் அரசு 106 மில்லியன் அமெ ரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் அரசு கடன் அடிப்படையில் நிதி உதவியை செய்துள்ளது. மின்சக்தி அமைச்சர், ஜோன் செனவிரட்ணவின் தலை மையில் இதற்கான ஒப்பந் தம் கடந்த 10ஆம் திகதி (புதன்கிழமை) அமைச்சு அலுவலகத்தில் கைச்சாத்தா னது.

அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பர்டினா ண்டோ, ஈரான் அரசின் சுனீர் மின்சார கம்பனியின் முகாமைத்துவ பணிப்பா ளர் ரேசா எபட்சாடென் மற் றும் ஈரானிய தூதுவர் ரஹிமி கோர்ஜி, இலங்கை மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கிராமிய மின் விநியோக திட்டத்தை

நடைமுறைப்படுத்துவதற்காக பெறப்படும் 106 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மின்சார வசதியற்ற சுமார் 1000 கிராமங்களில் வாழும் சுமார் 1,80,000 பேருக்கு மின் வசதிகள் பெற்றுக்கொடுக்கப் பயன்படுத்தப்படும் என்றும் மின் சக்தி அமைச்சு தெரிவிக்கிறது. 100 கே. வி. கொண்ட சுமார் 1000 உப நிலையங்கள் மற்றும் திரீபேஸ் மின் கம்பியில் 4000 கிலோ மீற்றருக்கு இணைப்பை வழங்கவும் முடியும் எனவும் அமைச்சு அறிவிக்கிறது.

ஈரான் அரசு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களையே பெற்றுக்கொடுக்க முன்வந்திருந்தது. எனினும் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளையடுத்து இதனை 106 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்த நிகழ்வின் போது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர்களான ரஞ்ஜித் குணவர் தன. எஸ். ஜயவர்தனா, ஈரான் சுனீர் நிறுவன திட்டப் பணிப்பாளர் மொஹமட் நெரேஷன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

20-20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்

11bravo20-20.jpgதென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் (இ பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: மாலை 6 மணி

நியுசிலாந்து Vs பாகிஸ்தான் (எப் பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: இரவு 10 மணி

தமிழ்சேவை ஊழியர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் பாடல் அடங்கிய இறுவட் டின் முதற் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக் கட்டி முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கக் கூடிய தேசத்தைப் பெற்றுத் தந்த ஜனாதிபதியின் புகழ்பாடும் வகையில் தமிழ்ச் சேவை தயாரித்த பாடலும், இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் நான்காவது பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் தமிழ் மொழி பெயர்ப்பும் கொண்ட இறுவட்டின் முதற் பிரதியும், 75 பிரதிகளும் அடங்கிய தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அலரி மாளிகையில் இக்கையளிப்பு இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் வீ. ஏ. திருஞானசுந்தரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ்ச் சேவை மற்றும் தென்றல் பணிப்பாளர் கே. ஜெயகிருஷ்ணா, உட்பட தமிழ்ச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து இவற்றை கையளித்தனர்.

இச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர்ந்து நாட்டுக்குக் கிடைத்த வெற்றியில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குப் பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டார்.

மனித நேய நடவடிக்கைகள் மாத்திரமன்றி, வடபகுதி மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும்முயற்சிகள் பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அலைவரிசைகள் பெரும் பங்களிப்பை நல்கியதாகக் கூறியதோடு, வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் வடபகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஊடகங்களுக்குள்ள பொறுப்புக்கள் பற்றியும் மேலும் விளக்கிக் கூறினார்.

இரான் அதிபர் தேர்தலில் நேற்று உற்சாக வாக்குப்பதிவு

11iran.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டு வாக்களிக்க வந்திருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹ்மூட் அஹ்மடி நிஜாத் முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரானில் மொபைல் தொலைபேசி மூலமாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தம்மால் வாக்குச் சாவடிக்குக்கு இடையேயான மேற்பார்வையை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை உள்ளதாக முசவி அவர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு வேட்பாளர்களை தவிர மெஹ்டி கரௌபி மற்றும் மொஷென் ரெசாய் ஆகிய இரு வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகளுக்காக 34 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய விடுதி

“வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்ட  வைத்திய விடுதி 34 நாட்களில் அதிவிரைவாக நிர்மாணித்து முடிக்கப்பட்டதாகும்’.
என்று உலக சுகாதார நிறுவனத்தின் தேசிய ஆலோசகர் வைத்திய கலாநிதி ஹிரிஸ் சந்திரயக்கண்டாவல தெரிவித்திருந்தார்.

உலக சுகாதார நிறுவன நிதியுதவியுடன் அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான சர்வதேச அமைப்பால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதியை திறந்துவைத்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தயாளன் தலைமையில் நடைபெற்ற விடுதி திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், மேலும் தெரிவித்ததாவது;

யாழ். மாவட்ட மக்களின் அவசர தேவை கருதி, எமது நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்திலிருந்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. இவை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையக் கூடியவாறு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.

அங்கு உரையாற்றிய யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்ததாவது;

“வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சாவகச்சேரி வைத்தியசாலையைப் பொறுத்த வரையில் பல்வேறு அவசரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியனவாக உள்ளன. வைத்தியர்கள், உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள், நடமாடும் வைத்திய பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு போன்றவை நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளில் சிலவாகும்.

வளப்பற்றாக்குறைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இங்குள்ள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.

உலக சுகாதார நிறுவனம் இந்நோயாளர் விடுதிக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகள், அலுமாரிகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் – குரூப் ‘இ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

11bravo20-20.jpgஇங்கிலாந் தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி 20  வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தொ‌டர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.