மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கபேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தங்களது குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் வடித்திருந்தனர். மேலும், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினர்.
சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பான விசாரணை அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்றது.
மார்க் சக்கபேர்க் மற்றும் TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.