July

July

இலங்கையின் போராட்டங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி !

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என  இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி..!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், ‘இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்’ என கூறப்பட்டுள்ளது. நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு | NASA's  Webb Delivers Deepest Infrared Image of Universe Yet - hindutamil.in

ரணில் விக்கிரமசிங்க வீட்டில் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்ட எரியாத புத்தங்கள் – ரணில் வீடு எரிக்கப்பட்டது அரசியல் நாடகமா..?

இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்சவையும் – ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் அன்று நள்ளிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் எரியூட்டப்பட்டது.

எரியூட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தொடர்பான அனுதாப அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வீடு ரணிலின் ஒரே ஒரு வீடு. அஙங்கு சுமார் பழமையான 2000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்பட்டன. இந்த வீடு பாடசாலை ஒன்றிற்காக  வழங்கப்பட்ட வீடு என்றெல்லாம் அனுதாப அலைகள் வீசின.

இதன் போது நேற்றைய தினம் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட முன்பு அவருடைய வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்ரே வீடு தீமூட்டப்பட்டதாக அந்த காணொளி நீள்கிறது. உண்மையில் புத்தகங்களும் – எந்த முக்கியமான ஆவணங்களும் ரணில் விக்கிரமசிங்க வீட்டிலிருந்து எரியவில்லை – எரிக்கப்படவில்லை.

எனினும் ரணில் விக்கிரமசிங்க வீடு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய போது “ இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும் தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும் அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என தெரிவித்துள்ள ரணில்,  எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள் ஹிட்லரின் சிந்தனையைக் கொண்டவர்கள் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

கடந்த போராட்டங்களின் போது சுமார் 30 ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்ட போதும் இந்த மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது எந்த வன்முறை சம்பவங்களும்  பெரிதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 9ஆம் திகதி போராட்டம் என்றவுடன் பிரதமர் இல்லமும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டது. ஆகவே வீட்டை எரிப்பதற்கான சந்தர்ப்பம் அரிதினும் அரிது.

No photo description available.

இந்த நிலையில் குறித்த வீடியோ சில கேள்விளை எழுப்பியுள்ளது..?

  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்கள் எப்படி தேவையான புத்தகங்கள் – முக்கியமான புத்தகங்கள் – முக்கியமான ஆவணங்கள் என்பவற்றை கண்டுபிடித்து பத்திரப்படுத்திவிட்டு எரித்தார்கள் ..?
  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்களுக்கு எப்படி இவ்வளவு கால அவகாசம் கிடைத்ததது..?
  • யாருடைய  வீடுகளும் எரிக்கப்படாத குறித்த நாளில் – குறித்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மட்டும் எரியூட்டப்பட்டது எப்படி..?
  • ஹிட்லரின் கூட்டம் என ரணில் கூறிய வன்முறை கூட்டத்துக்கு இந்த ஆவணங்கள் மீது மட்டும் என்ன தனிப்பட்ட கவனம்..?
  • வீடு எரிக்கப்பட்ட போது வீட்டில் யாருமே இல்லையே எப்படி..?

இப்படியாக விடை கிடைக்காத பல கேள்விகள்.

பசில் ராஸபக்ஷ, மகிந்த ராஸபக்ஷ ஆகியோர் பதவி விலகிய போது ராஸபக்சஆட்சி முழுமையாக கவிழ்ந்து விடும் அபாயம் காணப்பட்ட நிலையில் கோட்டாபாயவின்ஆட்சியை பாதுகாக்க ரணில் பிரதமராக பதவி ஏற்றார். கோட்டபாய அரசு மீதான மக்களின் கோவம் தன்னுடைய – தனது கட்சியினுடைய எஞ்சிய காலத்து அரசியலுக்கும் தடையாக அமைந்து விடும் என்பதால் மக்கள் அனுதாப அலையை தேடிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றிய திட்டமிட்ட நாடகமாக கூட இது இருக்கலாம்.

சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துளதாம் எரிந்த வீட்டின் எரியாத பக்கங்கள் தொடர்பில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன இன்னமும் நடக்கப்போகிறது என.

ரணிலுக்கு சார்பான தென்னிலங்கை ஊடகங்கள் பலவும் ரணில் வீட்டில் எரிந்ததாக கூறி எரியாத  2500 புத்தகங்களை பற்றி பேசி ரணில் மீதான அனுதாப அலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த 2500 நூல்களை விட மிகப்பெறுமதியான சுமார் 90000 புத்தகங்களையும் – ஏட்டுச்சுவடிகளையும் கொண்டிருந்த ஆசியாவின் முக்கியமான நூலகமான நமது யாழ் நூலகம்   எரியூட்டப்பட்டதைப் பற்றி இந்த தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதே கிடையாது என்பதே உண்மை.

இலங்கையில் நாளையநாள் துக்கதினமாக பிரகடனம் !

மறைந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஷின்ஸோ அபே - Tamil Latest News

நாளைய துக்கதினம் அரசுத் துறையின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, அரசு விடுமுறையாகக் கருதப்படாது என்றும் அனைத்து அரசு நிறுவனங்களும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67) கடந்த 8 ஆம் திகதி காலை நரா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் . அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகள் போதும் – பராக் ஒபாமா அ்ட்வைஸ் !

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் இந்த மூன்று கேள்விகள் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தெரிவித்துள்ளார். இரு மணங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் உங்களுக்காக

உங்கள் துணை எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரை விடவும் உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வமிக்கவராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் துணை என்ன நினைக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார் ?என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

 உங்க துணை நகைச்சுவை உணர்வு  உள்ளவரா?

உங்களும் வரும் துணை தங்களது செயல்கள் மூலமாக நகைச்சுவை திறன் இருந்தால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதியலாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கு நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும் உங்களின் திருமண வாழ்க்கியினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகின்றார்.

உங்க துணைவர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் துணையை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்.

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்கக்கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவி !

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், இராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபக்கமிருக்க புடின் தலைமையிலான ரஷ்யா அரசாங்கம் “அமெரிக்காவும் – மேற்குலக நாடுகளும் தொடர்ந்தும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டிருப்பதனாலேயே போர் இன்னம் பூதாகரமாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த போரினுள் தன்னுடைய ஆதிக்கத்தை திணிப்பதற்காக அமெரிக்கா முயல்வதை தொடர்ந்தும் காண முடிகின்றது. உலக அமைதியே தன்னுடைய குறிக்கோள் என அண்மையில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து உளமானதாக இருந்திருந்தால் – இருந்திருக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பபையும் சேர்த்து அமெரிக்கா அமைதிப்பேச்சுக்கு முயன்றிருக்கும். ஆனால் அது நடக்கவுமில்லை – அதற்கான வாய்ப்பும் இல்லை. அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா தான் ஆயுதங்களை வாரி வாரி கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைனியர்கள் தான் பரிதாபமானவர்கள் .

பிரச்சார மேடையில் துப்பாக்கிசூடு – ஜப்பானின் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு | Shinzo Abe

 

நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

 

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் – சனத்தொகை அதிகரிப்புக்கு என்னால் முடிந்த பணியை செய்கிறேன் என பதில் !

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.

இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து” என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் விமானப்பயணத்தின் போது விமானப்பணிப்பெண் ஒருவரை பாலியல்அத்துமீறலுக்கு  உட்படுத்துவது போல செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நஷ்ட ஈடும் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போரிஸ்ஜோன்சன் பதவியை ராஸினாமா செய்தமை தொடர்பில் பைடன் வெளியிட்ட அறிவிப்பு !

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியா அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா அறிவித்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்றார். எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

“சர்வதேச நாணயநிதியத்தை நம்பாதீர்கள். இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.”- என்கிறார் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் !

கடந்த 1997ஆம் ஆண்டு ஆசியாவில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் அந்த நெருக்கடியை எதிர்கொண்டு மிகச்சிறப்பான வகையில் நாட்டை மீட்டு எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மலேசியா அடைந்திருக்கும் அபிவிருத்தியின் பின்னணியில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.

மகாதீர் மொஹம்மத் தம்மைத்தாமே, தனிமைப்படுத்திக் கொண்டார் - Jaffna Muslim

1997 ஆம் ஆண்டளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பல நாடுகளும் சரிவதேசநாணயநிதியத்தின் உதவியையும், உலக வங்கியின் உதவிகளையும் எதிர்பார்த்த போது தைரியமாக அவற்றை புறக்கணித்து மலேசியாவுக்கு என தனியான பொருளாதார கொள்கைகளை உருவாக்கினார் மகாதீர் மொஹம்மத்.

இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.

எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்தது.

What's happening in Sri Lanka and how did the economic crisis start?

அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்.

சர்வதேச நாணய நிதியம் மியான்மருக்கு 350 மில்லியன் டொலர் பணத்தை அனுப்பியதாக தகவல் | Virakesari.lk

கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்சினை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்.

ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளது. ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர். இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.