08

08

பிரச்சார மேடையில் துப்பாக்கிசூடு – ஜப்பானின் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு | Shinzo Abe

 

நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

 

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் – சனத்தொகை அதிகரிப்புக்கு என்னால் முடிந்த பணியை செய்கிறேன் என பதில் !

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.

இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து” என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் விமானப்பயணத்தின் போது விமானப்பணிப்பெண் ஒருவரை பாலியல்அத்துமீறலுக்கு  உட்படுத்துவது போல செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நஷ்ட ஈடும் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போரிஸ்ஜோன்சன் பதவியை ராஸினாமா செய்தமை தொடர்பில் பைடன் வெளியிட்ட அறிவிப்பு !

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியா அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா அறிவித்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்றார். எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

“சர்வதேச நாணயநிதியத்தை நம்பாதீர்கள். இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.”- என்கிறார் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் !

கடந்த 1997ஆம் ஆண்டு ஆசியாவில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் அந்த நெருக்கடியை எதிர்கொண்டு மிகச்சிறப்பான வகையில் நாட்டை மீட்டு எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மலேசியா அடைந்திருக்கும் அபிவிருத்தியின் பின்னணியில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.

மகாதீர் மொஹம்மத் தம்மைத்தாமே, தனிமைப்படுத்திக் கொண்டார் - Jaffna Muslim

1997 ஆம் ஆண்டளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பல நாடுகளும் சரிவதேசநாணயநிதியத்தின் உதவியையும், உலக வங்கியின் உதவிகளையும் எதிர்பார்த்த போது தைரியமாக அவற்றை புறக்கணித்து மலேசியாவுக்கு என தனியான பொருளாதார கொள்கைகளை உருவாக்கினார் மகாதீர் மொஹம்மத்.

இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.

எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்தது.

What's happening in Sri Lanka and how did the economic crisis start?

அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்.

சர்வதேச நாணய நிதியம் மியான்மருக்கு 350 மில்லியன் டொலர் பணத்தை அனுப்பியதாக தகவல் | Virakesari.lk

கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்சினை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்.

ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளது. ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர். இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.