18

18

ஐரோப்பாவில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மோசமடையும் மக்களின் நிலை !

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது.

பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது.

தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது.

போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஸ்பெயினில் உள்ள மிஜாஸ் தீ, பிரபலமான சுற்றுலாப் பகுதியான மலாகாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஸ்பெயினின் பிற இடங்களில், காஸ்டிலா ஒய் லியோன், கலீசியா மற்றும் எக்ஸ்ட்ரீமதுரா மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

ஸ்பெயின், குரோஷியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் தீ பரவியதால், இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது – இராஜதந்திரி பீட்டர் ஹீப் விசனம்!

இலங்கைக்கு சர்வதேசசமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என பிரிட்டனின் ஓய்வுபெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thinakkural.lk

கார்டியனில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தில் பதில் நடவடிக்கை வெட்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர்.

போதியளவு பெற்றோல் இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் ( ராஜபக்சாக்களின் மோசமான ஆட்சி,30 வருட கிளர்ச்சியால் நாடு சிதைவடைந்ததன் பாரம்பரியம்) நெருக்கடி நிலையில் உள்ள இன்னொரு பொதுநலவாய நாட்டிற்கு உதவும் விடயத்திற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (நாங்கள் அவர்களின் விருப்பமின்றி அவர்களை 150 வருடங்களிற்கு மேல் ஆட்சி செய்தோம் என்பதை கருத்தில்கொள்ளவில்லை, அதற்காக நாங்கள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும்)

நாங்கள் மிக வேகமாக சர்வதேச நிவாரணமுயற்சியொன்றிற்கு தலைமை தாங்கவேண்டும், பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகிறார் கோட்டாபாய – வெளியாகியுள்ள அறிவிப்பு !

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.

இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ , அதன் பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும் மகனின் பாதுகாப்பிற்காக. அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

“28 வருட ஜனநாயக அரசியல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் ரணில் தான் நாட்டை மீட்பார்.”- டக்ளஸ் தேவானந்தா

இடைக்கால ஜனதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்  ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அதிபர் தேர்வுக்கான விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார். அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த அதிபர் போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.

ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் குறித்த போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிக்கவுள்ளேன்.

மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர். இது குறித்து பதில் அதிபருடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன். குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மஹிந்த தரப்பினரை பாதுகாப்பதற்கான தேவைப்பாடு ரணில் விக்ரமசிங்க இருக்கப்போவதில்லை.ஆனால் தற்போதுள்ள அரசு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை அவருக்கு இருக்கலாம். அவரும் இந்நாட்டின் ஒரு சிறந்த அரசியல்வாதிதான்.

நாடு குழப்ப நிலையில் இருந்தபோது யாரும் பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வராதிருந்தபோது ரணில் விக்ரமசிங்கவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். அதன்பின்னர் தற்போது அவருக்கு இந்த சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. அதற்கு அவர் சரியானவராகவே இருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனெனில் எனக்கும் இந்த நாடாளுமன்றில் 28 வருட ஜனநாயக அரசியல் அனுபவம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.