உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், இராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இது ஒருபக்கமிருக்க புடின் தலைமையிலான ரஷ்யா அரசாங்கம் “அமெரிக்காவும் – மேற்குலக நாடுகளும் தொடர்ந்தும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டிருப்பதனாலேயே போர் இன்னம் பூதாகரமாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த போரினுள் தன்னுடைய ஆதிக்கத்தை திணிப்பதற்காக அமெரிக்கா முயல்வதை தொடர்ந்தும் காண முடிகின்றது. உலக அமைதியே தன்னுடைய குறிக்கோள் என அண்மையில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து உளமானதாக இருந்திருந்தால் – இருந்திருக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பபையும் சேர்த்து அமெரிக்கா அமைதிப்பேச்சுக்கு முயன்றிருக்கும். ஆனால் அது நடக்கவுமில்லை – அதற்கான வாய்ப்பும் இல்லை. அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா தான் ஆயுதங்களை வாரி வாரி கொட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைனியர்கள் தான் பரிதாபமானவர்கள் .