20
20
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீந்த ஆரம்பித்து மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.
தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்திச் சென்று, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி வந்தடைந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி வயது-48, தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.
சியாமளா கோலி, தலைமன்னாரிலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி 50 நிமிடங்களில் சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.
இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
இது தொடர்பில் சியாமளா கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கெரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.
பாக் ஜலசந்தியை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளையும் அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.
“எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை தொடர்பாக உரிய தீர்வு வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு குறித்த விவரங்களை கொண்டு தீர்வு வழங்க கூடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரு அணிகளாக செயற்படுகின்றார்கள். ஒரு தரப்பு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடாது எனவும் இன்னொரு தரப்பு இதற்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தோடு குறித்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவும் பலருக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரச்சினை தொடர்பில் இதை தீராத பிரச்சினையாக இதை வைத்திருக்க விரும்பவில்லை. சில அரசியல் தலையீடுகள் இந்த விடயத்தை தீராத பிரச்சினையாக வைத்து அரசியல் செய்ய முனைகின்றார்கள் எனினும் நான் இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இன்றைய தினம் முதற்கட்டமாக உங்களை சந்தித்துள்ளேன் எதிர்வரும் காலங்களில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று உங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தர முடியும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.