29

29

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

paddy.jpgகிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தி லுள்ள சபை கமநல சேவைப்பிரிவுகளிலும் நீண்ட காலமாக கவனிக்கப்படாதிருந்த 1800 சிறிய குளங் கள் இவ்வருட இறுதிக்குள் புனரமைப்புச் செய் யப்பட்டு அடுத்த வருட சிறுபோக நெற் செய்கையின் போது நீர்ப்பாசன வசதிகள் வழங்கப் படுவதோடு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங் கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதே நேரம் கிழக்கு மாகாணத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்து வாய்க்காலை புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் லகுகலைக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு வாய்க்காலும் புனர மைக்கப்படவுள்ளன.

இதே போன்று பன்னல்கம நீர்த்தேக்கமும் புனரமைக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலுள்ள குளங்கள் திருத்தம் செய்யும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும் போது விவசாய நடவடிக்கைகளும் விஸ்தரிப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மல்வத்தை, கரடியனாறு விவசாயப்பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விதை நெல் உற்பத்தியும் அடுத்த பெரும் போகத்திலிருந்து அதிகரிக்கப்படவிருக்கிறது.

இது தவிர மூன்று மாவட்டங்களிலும் விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய ஏற்பாடுகளும், நெல் சந்தைப்படுத்தும் சபை கிழக்கில் பல முக்கிய இடங்களில் பாரிய களஞ்சியங்களை அமைக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவன வாகனங்கள் அகதிமுகாம்களுக்கு செல்ல அனுமதி

group_cooking.jpgதொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் அகதி முகாம்களுக்குள் பிரவேசிப்பது குறித்து இதுவரை பின்பற்றி வந்த நடைமுறைகளில் இலங்கை தளர்வினை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மெனிக்பாம் உள்ளிட்ட அகதி முகாம்களுக்குள் தொண்டு நிறுவன வாகனங்கள் பிரவேசிக்கக் கூடாதென அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

எனினும், வாகனங்களின்றி பெரிய முகாம்களில் சேவையாற்றுவது சிக்கல் மிக்க காரியமென தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தன. தொண்டு நிறுவனங்களின் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. தொடரணியாக செல்லக் கூடாது ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன் வாகனங்களை அகதி முகாம்களுக்குள் அனுமதிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மெரிஒகாமே தெரிவித்துள்ளார். 

மனித உரிமை கண்காணிப்பகம் ஐ.நா. விவாதம் குறித்து அதிருப்தி

HRW Logoஇலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையினால் முன்வைக்கப்பட்ட உத்தேச யோசனைத் திட்டம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதிலும், மனிதாபிமான பாதிப்புக்கள் குறித்து மனித உரிமைகள் பேரவை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டு. மாவட்ட பாடசாலைகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா ஆகிய நான்கு கல்வி வலயங்களிலுமுள்ள பாட சாலைகளிலேயே நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

மாணவர்கள் நிவாரணப் பொருட்களை பாடசாலை அதிபரிடம் கைய ளிக்க அதிபர் அப்பொருட்களை கோட்டக்கல்விப் பணிப்பாளரிடம் வழங்கினார். கோட்டக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.

சேகரிக்கப்படும் பொருட்களை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். பிஸ்கட், பால்மா வகைகள், உடுப்பு போன்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் இந் நிவாரணப் பொருட்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.

பதவிப் பிரமாணம் செய்தவர் சில நிமிடங்களில் மரணம்…

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து சில நிமிடங்களில் குறித்த உறுப்பினர் மாரடைப்பால் இறந்த சம்பவமொன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த மஹிந்த குருவிட என்பவர் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி. சிபால கூரே (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) என்பவர் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று (28) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின் கூட்ட மண்டபத்திற்கு படிக்கட்டினூடாக மேலே நடந்து சென்றுள்ளார். இதன் போது மாரடைப்பு ஏற்பட்ட இவர் இறந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர சபை அதிகாரி ஒருவர் கூறினார். இவர் உடனடியாக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் இவரை காப்பாற்ற முடியவில்லை என அறிவிக்கப்படுகிறது.

முதியோரை உறவினர்களுடன் அனுப்பும் பணி – மனிக்பாமில் பொலிஸ் அதிகாரிகளுடன் அரச அதிபர் கலந்துரையாடல்

chals_.jpgநலன்புரி முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ள முதியவர்களை அவற்றுக்கு வெளியில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் அரச அதிகாரிகள் மட்டத்தில் நேற்று (28) ஆராயப்பட்டுள்ளது.

முதியவர்களை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மனிக்பாமில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே மூவாயிரம் பேரை விடுவித்துள்ளதாகக் கூறிய அவர், புதிதாகக் கிடைத்துள்ள 1500 பேர் தொடர்பான விபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ளவர்களை விடுவித்துக் கொள்வதில் அவர்களின் உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க முடியுமென்றும் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுள் 10 வீதமானவர்கள் முதியவர்களென்று அரச அதிபர் தெரிவித்தார். இதேவேளை, முகாம்களில் கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளதால் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது. எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதே சமயம், பூந்தோட்டம் மற்றும் மத்திய மாகாண வித்தியாலயம் ஆகிய நலன்புரி நிலையங்களில் இருந்த மக்களுள் நேற்று ஒரு தொகுதியினர் ஐந்தாவது வலய நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

இடம்பெயர்ந்தோருக்கென நடமாடும் வைத்தியசாலை

medicine.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக நடமாடும் வைத்தியசாலையொன்றை அமைக்க ஐ.சி.ஆர்.சி. நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊடகப் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைத்தியசாலை எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் இந்த வைத்தியசாலையில் ஐ.சி.ஆர்.சி. மருத்துவக் குழுவொன்று பணிபுரிய உள்ளது எனவும் அவர் கூறினார். இது தவிர வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும் உதவி வழங்கியுள்ளதாக கூறிய அவர் இதன் மூலம் 500 க்கும் அதிகமான படுக்கை வசதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மெனிக்பாம் முகாமின் 3 ஆம், 4 ஆம் பிரிவுகளில் உள்ள 2350 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. நேற்றும் நேற்று முன்தினமும் (27, 28) வழங்கியுள்ளது. இதில் உலர் உணவுப் பொருட்கள், உடை, சமையல் உபகரணங்கள், சிறுவர்களுக்கான பொருட்கள் என்பன அடங்குவதாக சரசி விஜேரத்ன கூறினார்.

படைவீரர்களுக்கு முன்னுரிமை வழங்க பணிப்பு

தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கு வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பணித்துள்ளார். இது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி உள்ளூராட்சிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள், நகர, மாநகர சபைகள் பிரதேச சபைக் காரியாலயங்களுக்கு அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்கவும், அவர்களது தேவையை விரைவாக நிறைவேற்றவும் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுமானால் அது பற்றி அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன் அவர்கள் குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் மாகாண பிரதம செயலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்படவுள்ளது

யுத்த முனையில் பணி புரிந்த 13 இராணுவ தளபதிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்கி கெளரவம்

sa-po-se.jpgதீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயற்பட்ட இராணுவத்தினரைக் கெளரவிக்கும் வெற்றி அணிவகுப்பு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தின் போது வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த 13 முன்னணி தளபதிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இராணுவத் தலைமையகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளையும், படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிவகுப்பு இடம்பெற்றது. இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் தலைமையில் 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த மரியாதை அணி வகுப்பில் 50 அதிகாரிகள், 1201 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவ வாத்தியக் குழுவின் இசையுடன், இராணுவத்தின் மோட்டார் வாகன பவனிக்கு மத்தியில் வருகை தந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவையும், அவரது பாரியார் திருமதி அனோமா பொன்சேகா ஆகியோரை இராணுவத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி வரவேற்றார். பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்ட இராணுவத் தளபதி அங்கு வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் சகல படைப் பிரிவினர்களினதும் மரியாதை அணி வகுப்பை பார்வையிட்டார்.

இந்த நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம் பெற்று வந்த பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடக்கு, கிழக்கில் களமுனைகளில் இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த தளபதிகளின் சேவையை பாராட்டும் வகையில் இராணுவத் தளபதி தனது உத்தியோகபூர்வ பாராட்டுக் கடிதங்களை இராணுவ சம்பிரதாயத்திற்கமைய 12 தளபதிகளிடமும் கையளித்தார்.

அங்கு கூடியிருந்த இராணுவத்தின் உயர் அதிகாரிகள், குடும்ப உறவினர்கள் மற்றும் பெருந்தொகையான ஊடகவியலாளர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் இந்த பாராட்டுக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், இராணுவத்தின் தற்போதைய பிரதான பாதுகாப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, யாழ். பாதுகாப்பு படைப் பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க ஆகியோர் முதலாவதாக கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளும் கெளரவிக்கப்பட்டனர்.

இராணுவத்தின் 57 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், 59 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா, 3 வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சத்தியப் பிரிய லியனகே, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, பிரிகேடியர் சாகி கால்லகே, 2 வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார, 4 வது அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் நிஷாந்த வன்னியாராச்சி, கேர்ணல் ரவிப்பிரிய ஆகியோர் கெளரவிக்கப்பட்டதுடன் தளபதியினால் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பாராட்டைத் தொடர்ந்து இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா விசேட உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படைப் பிரிவுகளின் தளபதிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக சென்று தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதில் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்தோருக்கு வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் உதவி

kathir-camp.gif வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு சுமார் ஜந்து கோடி ரூபாய் பொறுமதியான நிவாரணப் பொருட்களை வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் அனுப்பி வைத்துள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் கொழும்பு வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிநாடுகளிலும் சேகரித்த இந்த நிவாரணப் பொருட்கள் 10 லொறிகளில் வவுனியாவக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் கட்டம் கட்டமாக  பகிர்ந்தளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வன்னி மக்கள் மேம்பாட்டு நிதிய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.