படைவீரர்களுக்கு முன்னுரிமை வழங்க பணிப்பு

தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கு வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பணித்துள்ளார். இது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி உள்ளூராட்சிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள், நகர, மாநகர சபைகள் பிரதேச சபைக் காரியாலயங்களுக்கு அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்கவும், அவர்களது தேவையை விரைவாக நிறைவேற்றவும் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுமானால் அது பற்றி அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன் அவர்கள் குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் மாகாண பிரதம செயலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்படவுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *