வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு சுமார் ஜந்து கோடி ரூபாய் பொறுமதியான நிவாரணப் பொருட்களை வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் அனுப்பி வைத்துள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் கொழும்பு வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிநாடுகளிலும் சேகரித்த இந்த நிவாரணப் பொருட்கள் 10 லொறிகளில் வவுனியாவக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் கட்டம் கட்டமாக பகிர்ந்தளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வன்னி மக்கள் மேம்பாட்டு நிதிய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.