பதவிப் பிரமாணம் செய்தவர் சில நிமிடங்களில் மரணம்…

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து சில நிமிடங்களில் குறித்த உறுப்பினர் மாரடைப்பால் இறந்த சம்பவமொன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த மஹிந்த குருவிட என்பவர் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி. சிபால கூரே (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) என்பவர் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று (28) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின் கூட்ட மண்டபத்திற்கு படிக்கட்டினூடாக மேலே நடந்து சென்றுள்ளார். இதன் போது மாரடைப்பு ஏற்பட்ட இவர் இறந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர சபை அதிகாரி ஒருவர் கூறினார். இவர் உடனடியாக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் இவரை காப்பாற்ற முடியவில்லை என அறிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *