25

25

949 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம் – உதய நாணயக்கார

navy_rescue_civil.jpgபுலிகளின் பிடியிலிருந்து வந்த 949 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவர்களில் 810 பொது மக்கள் இராணுவத்தினரிடமும், 139 பொது மக்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 810 பொது மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை டிங்கிப் படகுகள் மூலம் இரு தடவைகளாக 129 பொது மக்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். முதலாவது குழுவில் 126 பொது மக்களும் இரண்டாவது குழுவில் 13 பொது மக்களும் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர். இவர்களில் 43 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவர்.

இவர்களில் காயமடைந்தவர்களுக்கு கடற்படையினர் உடனடி முதலுதவிகளை வழங்கியுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

இவ்வருட ஐ.பி.எல். தென்னாப்பிரிக்காவில்

_ipl_graphic_.jpgபாது காப்புக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, தென்னாபிரிக்காவில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாக சபை உறுதி செய்துள்ளது.

முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரகாலம் தாமதமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதலாவது ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், அது ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே இந்தச் சுற்றுப் போட்டியும் நடக்கவிருந்ததால், அதற்கான பாதுகாப்பு அங்கீகாரத்தை பெற போட்டிகளை நடத்துபவர்கள் தவறிவிட்டதால், இதனை இங்கிலாந்தில் நடத்தலாமா என்றும் முதலில் ஆராயப்பட்டது.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்- நவநீதம் பிள்ளை

nawaneetappilli.jpgஇலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த ஐ.நா. மன்றத் தலைவர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதை மீண்டும் வலியுறுத்தப் போகிறேன் என்று தெரிவித்தார் நவநீதம் பிள்ளை. இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.மன்றத்தின் கருத்து என்று தெரிவித்த நவநீதம் பிள்ளை, சிவிலியன்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் மனித உரிமை நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து்ம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கவலைகள் குறித்தும் இந்திய அமைச்சர்களிடம் விவாதித்தாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.

கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று அவசர சந்திப்பு

tna-mp-22.jpgஜனாதி பதியுடனான சந்திப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (25) கொழும்பில் அவசர சந்திப்பொன்றை நடத்துகின்றனர்.

நாளைய தினம் (26) பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதேநேரம், ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று பேச்சுவார்த் தைக்குச் செல்வது சிறந்ததாகுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித் தனியாக அனுப்பி வைத்த கடிதம், நேற்றைய தினமே கிடைத்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர். எனினும் நேற்றைய தினமே அவசரமாகக் கூடுவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொழும்புக்கு வெளியில் உள்ள சில உறுப்பினர்களின் வசதி கருதி இன்றைய தினம் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை வியாழக்கிழமை மாலை 6.30 இற்கு நடைபெறும் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று சாதகமான முடிவு எடுக்கப்படலாமெனத் தெரியவருகின்றது.

முன்பு, கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது திடீரென கிடைத்துள்ள அழைப்பை கூட்டமைப்பினர் தவறவிடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

tna-mp-22.jpg

தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விரைவு

t-mala-stu.pngதிரு கோணமலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென கொழும்பிலிருந்து தொற்று நோய்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஒருவர் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 இவர் திருகோணமலையில் தற்போது விசாரணைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை மற்றும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் பரிசோதனைகள் இடம்பெறுவதுடன் அதன் அறிக்கைகளை விரைவாக சுகாதார அமைச்சுக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதும் ‘குறுந்தகவல் மூலம்’ தகவல். இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச் சீட்டு தயாரிக்கப்பட்டதும் அதனை யைடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருவதாக உள்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

குடிவரவுகுடியகல்வு திணைக்களம் மக்களுக்கான தமது சேவையை விரிவுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு அம்சமாகவே மேற்படி திட்டம் இன்று முதல் நடைமுறைக்குவருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் திணைக்களத்தின் முதலாவது மாடி மக்களை வரவேற்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறியும் பிரிவாக இன்று முதல் இயங்கவுள்ளது. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் மக்களின் நலன் கருதி விசேட வசதிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட நிகழ்வொன்று இன்று கொழும்பு புஞ்சிபொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் குடியவரவு குடியகல்வு நிர்வாகச் செயலாளர் நாயகம் பி. பீ. அபேயகோன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவர் லேஹா டீ சில்வா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதிபர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளித்தால் அதனை ஏற்க தயார் – கல்வி அமைச்சர்

susil-premaja.jpgபாடசாலை அதிபர்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தால், அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

அதிபர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், எட்டப்பட்டுள்ள தீர்வினை அரசசேவை ஆணைக்குழு மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், அதிபர்களுக்குச் சம்பந்தமில்லாத ஆசிரிய சங்கமொன்று, பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

குறித்த சங்கத்திற்குப் பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும், எனினும், அந்த அழைப்பை ஏற்காது தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறெனினும், அவர்களின் பதவி விலகல் கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் தயாராகவே உள்ளாரென்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, திட்டமிட்டபடி அதிபர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரிய தொழில் சார்ந்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்தார்.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் இந்தப் பிரச்சினையை கல்வி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.  இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த கல்வி அமைச்சர், ஏற்கனவே, தீர்க்கப்பட்டுவிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சங்கம் பிரபல்யத்தைத் தேட முனைவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு அதிபர்களைக் கல்வி அமைச்சுக்கு வரவழைத்துள்ள இந்தத் தொழிற்சங்கம், பதவி விலகல் கடிதங்களைத் தனியே கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வாமையில் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்கு காரணம் – ருபெல்லா ஆரம்ப விசாரணைகளில் தகவல்

vaccina.jpgதடுப்பு மருந்தில் எவ்வித பிழையுமில்லை. ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுகாதார அமைச்சு மருத்துவர்கள் குழுவின் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை, இரத்த பரிசோதனை அறிக்கை, உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே இறுதி முடிவொன்றுக்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று குறித்த சிறுமியின் தாய் எழுதியிருந்த கடிதக் குறிப்பில் சம்பந்த ப்பட்ட டாக்டர் கவனமெடுத்தல் அவசிய மென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி மரணமடைந்தமை தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பில் பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் விசாரணை அறிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் பார்வைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இத் தடுப்பு மருந்து ஏற்றல் திட்டத்தை ஆரம்பிப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளித்த போது :-

பசுப்பால் சம்பந்தப்பட்ட ஆகாரங்கள் தமது மகளின் உடலுக்கு ஒவ்வாததெனவும் ருபெல்லா தடுப்பூசி வழங்குபவர்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் மரணமடைந்த சிறுமியின் தாயார் கடிதக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். இதனை தடுப்பூசி வழங்கிய டாக்டர் கவனத்திலெடுத்திருக்கலாம் என்பதே பலரதும் கருத்தாகிறது.

ருபெல்லா தடுப்பு மருந்து 1996ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களை மேற் கொள்வோர் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் குற்றம் ஒப்புவிக்கப்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய இச்செய்தியாளர் மாநாட்டிற்கு மேற்படி தடுப்பு மருந்துடன் தொடர்புபடும் சுகாதார நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் பின்பற்றட்டும்

ulama-party.jpgரணில் விக்ரமசிங்கவின் தலைமையை மாற்ற முன்வந்துள்ள அக்கட்சி செயற் குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்டுவதோடு இது போன்ற துணிவு சமூகப்பற்றற்ற ரவூப் ஹக்கீமின் தலைமையையும் மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனை கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற உலமாக்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐ. தே. க. என்ற வண்டியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன் என அன்று தலைவர் அஷ்ரப் கூறியதை மு. காவின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் உதாசீனம் செய்த போதும் இன்று அக்கருத்தை ஐ. தே. கவின் செயற் குழு உறுப்பினர்கள் ஏற்று செயற்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

இது போன்ற துணிவு மு. காவினருக்கு வருமா என்பது சந்தேகமே. என்றாலும் அத்தகைய துணிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சமூகப்பற்று இருக்கின்றது என்பது தெளிவாகும். அத்தகைய துணிவை ஏற்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மு. காவின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்க முன்வரவேண்டும்.
எவ்வாறு ஐ. தே. க. ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்களிப்பதை தவிர்த்து அதன் செயற் குழுவினருக்கு இத்தகைய தைரியத்தை அளித்தார்களோ அதே போல் முஸ்லிம் சமூகமும் மு. காவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் அக்கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் தைரியத்தை வரவழைக்க முடியும்.
இல்லையேல் ரவூப் ஹக்கீமும் அவரை சார்ந்துள்ளோரும் இந்த சமூகத்தை அதளபாதாளத்தில் தான் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக மரபுரிமை அமைப்பின் பணிப்பாளர் சபை மாநாடு

உலக மரபுரிமை அமைப்பினது பணிப்பாளர் சபையின் சர்வதேச மட்டத் திலான மாநாடு நாளையும் நாளை மறுதினம் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடு கள்s கலந்து கொள்கின்றன.