பாது காப்புக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, தென்னாபிரிக்காவில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாக சபை உறுதி செய்துள்ளது.
முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரகாலம் தாமதமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதலாவது ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், அது ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே இந்தச் சுற்றுப் போட்டியும் நடக்கவிருந்ததால், அதற்கான பாதுகாப்பு அங்கீகாரத்தை பெற போட்டிகளை நடத்துபவர்கள் தவறிவிட்டதால், இதனை இங்கிலாந்தில் நடத்தலாமா என்றும் முதலில் ஆராயப்பட்டது.