திரு கோணமலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென கொழும்பிலிருந்து தொற்று நோய்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஒருவர் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் திருகோணமலையில் தற்போது விசாரணைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை மற்றும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் பரிசோதனைகள் இடம்பெறுவதுடன் அதன் அறிக்கைகளை விரைவாக சுகாதார அமைச்சுக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.