13

13

விடுதலைப்புலிகளுக்கும் – ஜே.வி.பிக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை – நாமல் ராஜபக்ஷ

விடுதலைப்புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) க்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அபை்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகிய இரண்டும் பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் படுகொலை செய்தல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளன.

விடுதலைப் புலிகளைப் போன்று ஜே.வி.பி.யும் மகா சங்கத்தினர், சாதாரண பிரஜைகள் மற்றும் பேருந்துகள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான ஜே.வி.பி., அழிவுகரமான நடத்தையின் வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், நாட்டை அழிவுக்குக் காரணமானவர்களிடம் ஒப்படைப்பதா அல்லது தேசத்தை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சில அரசியல் கட்சிகள் வெறும் தற்பெருமை மூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை கவிழ்க்க முடிந்த அத்தகைய தற்பெருமைக்காரர்களின் ஒரு பிரிவினரை அவர் விமர்சித்தார், அவர்கள் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் கப்பலை கைப்பற்றிய ஈரான் – தொடரும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன.

 

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ஏரீஸ் (MSC Aries) என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இஸ்ரேலிய பில்லியனர் இயல் ஒபர் (Eyal Ofer) மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் சோடியாக் குழுவின் ஒரு பகுதியான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மரைடைமுடன் தொடர்புடையது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராவிலிருந்து வடகிழக்கே 50 கடல் மைல் (92 கிமீ) தொலைவில் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான நீர்வழிப்பாதையில் “பிராந்திய அதிகாரிகளால்” ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கூறியது.

நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான்நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

 

கிளிநொச்சியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் !

கிளிநொச்சி,பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டில் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12 ) இரவு 11 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மேற்படி குழுவினர் வீட்டின் உரிமையாளரை தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

 

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சம்பவத்தில் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்