23

23

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.

eric-solheim.jpgஇலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனோவுக்கு அல்லது விக்ரமபாகுவுக்கே மேல் மாகாணத் தேர்தலில் வாக்களியுங்கள்- கூட்டமைப்பு கோரிக்கை

election.jpgஜனநாயக மக்கள் முன்னணி அல்லது இடதுசாரி ஐக்கிய முன்னணி சார்பான வேட்பாளர்களே மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான என். ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளிட்டிருக்கும் ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்திருப்பதாவது; எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் முன்பாக இருக்கும் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

எனவே, ஒன்றில் மனோ கணேசன் எம்.பி.யினால் (ஜனநாயக மக்கள் முன்னணி) நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த 2 அணிகளில் எதனை தெரிவு செய்வதென்பது அவரவரைப் பொறுத்தது. இந்த 2 அணிகளுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோடு இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர வேண்டுகோள்

cvili.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு கடந்த சிலதினங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கிராம மட்டத்திலான அமைப்புக்களிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலைநிறுத்தம்: பஸ்களை நிறுத்திய அதிகாரிகள், கடைகளை மூடிய போலீஸ்

23-bandh-tamilnadu.jpgதிமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

ரி.எம்.வி.பியிலிருந்து விலகிய இளைஞனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பொலிஸில் தஞ்சம் பெற்றிருந்த இளைஞரொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார். கருங்காலிச்சோலையைச் செர்ந்த வெற்றிவேல் புஸ்பராஜா ( வயது19 ) என்ற இளைஞரே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி திருமணம் செய்துள்ள இந்நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை என்றும் தன்னை விடுவிக்க உதவுமாறும் கோரி கல்குடா பொலிசில் இன்று தஞ்சம் கோரியிருந்தார் .

குறிப்பிட்ட இளைஞரின் கோரிக்கையின் பேரில் அவரது வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்திய போது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார் 

இரண்டாம் கட்ட தேர்தல்: 60 சதவீத ஓட்டுபதிவு

india-election.jpg மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த அதிமுக தொண்டர் சுப்பிரமணி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). அதிமுக தொண்டரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கு இந்த வாரம் பிரிட்டிஷ் அமைச்சர் வருகிறார் -பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவிப்பு

uk-parl.jpgஇலங்கைக்கு இந்த வாரம் அமைச்சர் ஒருவரை அனுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரிட்டிஷ் எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வருகை தர இடமளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை மதிப்பீடு செய்யவே இத் தூதுக்குழு வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் வாராந்த கேள்வி, பதில் நேரத்தின்போது இதனை தெரிவித்திருக்கும் பிரவுண், பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி.க்களடங்கிய தூதுக்குழுவை ஏற்றுக் கொள்ள இப்போது இலங்கை தயாராக இருப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வார பிற்பகுதியில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் இலங்கைக்கு செல்வாரெனவும் அவர் கூறியுள்ளார்.  மனிதாபிமான உதவி தேவை என்று அரசுக்கு வலியுறுத்துவோம். அத்துடன் யுத்த நிறுத்தம் தேவை என்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்றும் வலியுறுத்துவோம் என்று கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு புளொட் இயக்கம் ஊட்டச்சத்து பிஸ்கட் சமைத்த உணவு உதவி

civiling_flee_vanni_02.png
வவுனியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரச செயலக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் மற்றும் சமைத்த உணவு என்பன கடந்த இருதினங்களாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்துள்ளதையடுத்து, அவர்களது அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டசத்துமிக்க 700 கிலோ பிஸ்கட் மற்றும் இரண்டு தினங்களாக 30 ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் என்பன பொதுமக்களின் பேருதவியோடு வழங்கப்பட்டுள்ளதாகவும் புளொட் அமைப்பி்ன் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்

பாதுகாப்பு வலயத்திலிருந்து 90 மணித்தியாலங்களில் 103,143 பொதுமக்கள் வருகை

cvili.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் இன்று காலை வரை 103,143 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கருதி வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் நேற்று இரவு வரை 83,429 பொதுமக்கள் இராணுவத்தின் 58 ஆம் படையணியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 31,017 சிறுவர்களும், 27,990 பெண்களும், 24,422 ஆண்களும் அடங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

cvili.jpg